Current Affairs
TNPSC DAILY CA APRIL 9 - Tamil
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி-க்கு முதலிடம
சுருக்கம்:
- இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை ஆய்வுசெய்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுவருகிறது. அந்த வகையில், 2020ஆம் ஆண்டிற்கான தேசிய தரவரிசைப் பட்டியலை அத்துறையின் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார்.
- இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது
- சிறந்த பல்கலைக்கழகம், கல்லூரி, பொறியியல் கல்வி நிறுவனம், மேலாண்மை படிப்பு நிறுவனம், மருந்தியல் கல்வி நிறுவனம், மருத்துவக் கல்வி நிறுவனம், கட்டடக் கலை கல்வி நிறுவனம், சட்டம் ஆகிய ஒன்பது துறைகளின் கீழ் தனித்தனியே பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) முதலிடத்தையும், பெங்களூர் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனம் 2ஆம் இடத்தையும், டெல்லி ஐஐடி 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
- கோயம்புத்தூரில் உள்ள அமிர்தா விஸ்வ வித்யாபீடம் 13ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.2019ஆம் ஆண்டு இப்பட்டியலில் 14ஆம் இடம்பிடித்த அண்ணா பல்கலைக்கழகம், இந்தாண்டு ஆறு இடங்கள் பின்னோக்கி 20ஆவது இடத்திற்குச் சென்றுள்ளது.
- பாரதியார் பல்கலைக்கழகம் 21ஆம் இடத்தைத் தக்கவைத்துள்ளது. சென்றாண்டில் 33ஆம் இடத்திலிருந்த சென்னை பல்கலைக்கழகம், தற்போது 41ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
- சிறந்த பல்கலைக்கழகங்களில் பெங்களுர் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் முதலிடத்தையும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
- தமிழ்நாட்டின் அமிர்த விஷ்வ வித்யாபீடம் 4ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்தாண்டு 6ஆம் இடத்திலிருந்த அண்ணா பல்கலைக்கழகம், இந்தாண்டு 12ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
- பாரதியார் பல்கலைக்கழகம் 13ஆம் இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் 22ஆம் இடத்திலும் உள்ளன.சிறந்த கல்லூரிகள் தரவரிசை பட்டியலில், சென்னை மாநிலக் கல்லூரி 4ஆம் இடத்தையும், லயோலா கல்லூரி 5ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
- நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 14ஆம் இடத்தையும், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 15ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
- கட்டடக் கலையில் இந்தியாவிலுள்ள 20 கல்வி நிறுவனங்களில், திருச்சி தியாகராஜா பொறியியல் கல்லூரி 18ஆம் இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 19ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
SFDR ஏவுகணை - இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது
சுருக்கம்:
- SFDR-அடிப்படையிலான உந்துவிசையானது சூப்பர்சோனிக் வேகத்தில் மிக நீண்ட தூரத்தில் வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறிக்க ஏவுகணையை செயல்படுத்துகிறது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO)
- இந்தியா வெற்றிகரமாக சோலிட் ஃப்யூயல் டக்டட் ராம்ஜெட் (SFDR) பூஸ்டர், ஏவுகணை அமைப்பில் சோதனை செய்தது. இங்குள்ள ஒடிசா கடற்கரையில் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வரம்பு (ITR).
முக்கிய சிறப்பம்சங்கள்:
- SFDR-அடிப்படையிலான உந்துவிசையானது சூப்பர்சோனிக் வேகத்தில் மிக நீண்ட தூரத்தில் வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறிக்க ஏவுகணைக்கு உதவுகிறது,
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO)சோதனையானது சிக்கலான ஏவுகணை அமைப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து முக்கிய கூறுகளின் நம்பகமான செயல்பாட்டை நிரூபித்தது மற்றும் அனைத்து பணி நோக்கங்களையும் பூர்த்தி செய்தது.
- ITR ஆல் பயன்படுத்தப்பட்ட டெலிமெட்ரி, ரேடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம்ஸ் போன்ற பல கருவிகள் மூலம் எடுக்கப்பட்ட தரவுகளிலிருந்து கணினியின் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், SFDR இன் வெற்றிகரமான சோதனைக்காக DRDO-க்கு வாழ்த்து தெரிவித்தார்.
389 நடமாடும் மருத்துவமனைகள்
சுருக்கம்:
- தொலைதூர கிராமங்களில் மருத்துவ வசதியை மேம்படுத்த 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
- ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் அங்கேயே சென்று நோய்களை கண்டறிந்து, அதற்கான சிகிச்சை அளித்திட 2007-ம் ஆண்டு 100 மருத்துவ வாகனங்கள் வாங்கப்பட்டு, கருணாநிதியால் 100 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டது.
- 2008-ம் ஆண்டு 285 நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாங்கப்பட்டு மொத்தம் 385 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- ஒரு மருத்துவக் குழுவில் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர், ஒரு ஓட்டுனர், ஒரு துப்புரவு பணியாளர் பணியமர்த்தப்பட்டு தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திலேயே தேவையான மருத்துவ வசதி அளிக்க முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன.
- நடமாடும் மருத்துவக்குழு சிறந்த தாய்-சேய் நலன், காசநோய்க்கான சிகிச்சை, தொற்றா நோய்களுக்கான சிகிச்சை ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், கிராமங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் வரையறுக்கப்பட்ட பயணத்திட்டத்தின்படி மருத்துவ சேவை அளிப்பதே நடமாடும் மருத்துவமனை திட்டத்தின் நோக்கமாகும்.
- இந்த திட்டத்தின் கீழ், ஒரு மாதத்துக்கு ஒரு வட்டாரத்தில் 40 முகாம்கள் நடத்தப்பட்டு வருவதோடு, அதிக தற்காலிக குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய், காசநோய் உள்ளவர்களுக்கு ஒரு மாதத்துக்கான மருந்துகளும் வழங்கப்படுகிறது.
- இந்தநிலையில், 2021-22-ம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கையில், "தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த புதிதாக 389 எண்ணிக்கையில் நடமாடும் மருத்துவக்குழு வாகனங்கள் ரூ.70 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.
- அதன் அடிப்படையில், ஒரு வாகனத்துக்கு தலா ரூ.18 லட்சம் செலவில் தமிழ்நாட்டில் உள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனத்தை மாற்றுவதற்கு ரூ.70.02 கோடி நிதி தேசிய நலவாழ்வு குழுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மூலம் புதிதாக வாங்கப்பட்ட 389 வாகனங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, அதன் சேவையை தொடங்கி வைக்கும் அடையாளமாக 133 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை சென்னை அண்ணா சதுக்கம் அருகே நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
- இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஐ ஐ டி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செயற்கை முழங்கால் அறிமுகம்
சுருக்கம்:
- முழங்காலின் மேல்பகுதி வரை இழந்தவர்கள், எளிதாக நடக்கும் வகையில் 'கதம்' என்ற பன்மைய செயற்கை முழங்காலை சென்னை ஐஐடி மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையக் குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
- அறிமுக நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் இணையவழியில் கலந்துகொண்டார்.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மைய ஆசிரியத் தலைவர் சுஜாதா முன்னிலையில், செயற்கை முழங்கால் அறிமுகம் செய்யப்பட்டது.
- மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் பேசியதாவது: ஒருவரின் உலகத்தை மற்றவர்களுடன் இணைப்பது தொழில்நுட்பம்தான்.
- அனைத்து தரப்பு மக்களிடமும் தொழில்நுட்பம் திருப்பத்தை ஏற்படுத்துகிறது. 'கதம்' அத்தகைய கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதில், பேருந்துகள், ஆட்டோக்களில் எளிதாக அமர்ந்து செல்லவும், நடக்கும்போது செயற்கை முழங்காலை 160 டிகிரி மடக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
- சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகேடி பேசும்போது, "சுகாதாரம், மருத்துவத்தை தொழில்நுட்ப ரீதியாக சந்திக்க வேண்டியது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு அவசியம். இந்த தேவையை நியாயப்படுத்தும் உதாரணமாக கதம் பன்மைய செயற்கை முழங்கால் அமைந்துள்ளது"
- மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையத் தலைவர் பேராசிரியர் “இறக்குமதி செய்யப்பட்ட முழங்கால்களைவிட, 4 அல்லது 5 மடங்கு மலிவு விலையில், சர்வதேச தரத்துடன் கதம் கிடைக்கும். பல்வேறு புவியியல் அமைப்புகளில், விரிவான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, பயனாளிகளுக்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது"
- பேருந்துகள், ஆட்டோக்களில் எளிதாக அமர்ந்து செல்லவும், நடக்கும்போது செயற்கை முழங்காலை 160 டிகிரி மடக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
ஹெச் 4 விசா தாரர்களுக்கு அமெரிக்காவில் பணிபுரியும் உரிமை அளிக்கும் மசோதா
சுருக்கம்:
- வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணி புரிய ஹெச்.1 பி விசா அளிக்கப்படுகிறது. பல லட்சம் இந்தியர்கள், இதன் மூலம் அமெரிக்காவில் பணி புரிகின்றனர்.மனைவி அல்லது கணவருக்கு ஹெச்-4 விசா அளிக்கப்படுகிறது.
- ஹெச்-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் பணி புரிவதற்கு டிரம்ப் ஆட்சியில் பல தடைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
- இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர, வழக்கு தொடுத்துவர்களுடன் அமெரிக்க அரசு ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது
முக்கிய சிறப்பம்சங்கள்:
- ஹெச்-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் பணி புரிய முழு அனுமதி அளிக்கப்படும் என்று ஜோ பைடன் அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பல லட்சம் குடும்பங்கள் இதனால் பலனடையும் என்று கருதப்படுகிறது.
- எச்-4 விசா வாயிலாகவும் வெளிநாட்டவர்கள் அமரிக்கா குடிபெயர்ந்து அதிகளவில் பணிபுரிந்து வருவதாகவும், இவர்களாலும் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பாதுகாப்பு பறிபோவதாக அதற்கு எதிராக டிரம்ப் தலைமையிலான அரசு கடும் சட்டங்களைக் கொண்டு வர இருக்கிறது
- எச்-4 விசா முறையானது ஒபாமா அரசால் கொண்டு வரப்பட்ட குடியேற்ற சட்டமாகும். அப்பேதில் இருந்து ஒபாமாவை டிரம்ப் கடுமையாக ஒபாமாவின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்த நிலையில் அவர் கொண்டு வந்த சட்டத்தினை முழுமையாக நீக்க முடிவு செய்துள்ளார்.
- எச்-4 விசா முறை நீக்க நடவைக்கான சீர்திருத்த சட்டங்கள் இறுதி நிலையை எட்ட உள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததனை அடுத்து அதன் நிலை தெரியவந்துள்ளது.
- எச்-4 விசா தடை குறித்து இறுதி அறிவிப்பை அமெரிக்க அரசு ஜூன் மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் எச்-1பி விசா விதிமுறைகளை அமெரிக்க அரசு கடுமைபடுத்தியும் வருகிறது.
- 2017-ம் ஆண்டு இந்தியர்கள் எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்கா செல்வதும் குறைந்துள்ளது. ஆனால் பிற நாடுகளை விட இந்தியர்கள் அதிகளவில் எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்கா சென்று வருவதால் இந்தியர்களை எச்-1பி விசா பெறுவதில் இருந்து முழுமையாகக் குறைப்பது என்பது சாத்தியமே இல்லை.
- இந்திய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் 2017-ம் ஆண்டு 6,673 எச்-1பி விசாக்களைப் பெற்றுள்ளனர்.
தமிழ் பல்கழைக்கழகம் - சிங்கப்பூர் தமிழ் மரபுடைமைக் கழகம் ஒப்பந்தம்
சுருக்கம்:
- தமிழக அரசின் நிதி நல்கையில் தமிழ்ப்பல் கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப்பண்பாட்டு மையத்துடன் சிங்கப்பூர் தமிழ் வரலாற்று மரபுடைக் கழகம் தர வகுப்புகள் நடத்து வதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
- சிங்கப்பூரின் தமிழ் வரலாற்று மரபுடை மைக் கழகம் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழர் வரலாற்றையும் மரபுகளையும் தென்கிழக்காசியா விற்கு, குறிப்பாகச் சிங்கப்பூர், மலேசிய நாடு களுக்குக் கொண்டு செல்லும் வண்ணம் நிகழ்ச்சி களையும் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகின்றது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- இராசேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா, இராசேந்திர சோழன் திருவுருவப் பட அறிமுக விழா ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும்.
- இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பொழுது தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா சிரியர் வி.திருவள்ளுவன் கூறுகையில், ‘‘சிங்கப்பூர், மலேசியா போன்ற தென்கிழக்கா சிய நாடுகளில் தமிழ் இசை மற்றும் தமிழர் கலை களையும் கற்பிக்கும் தேவைகளை அறிந்து,அவற்றை நிறைவேற்றும் வண்ணமாக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.
- இவ்வொப்பந்ததின் மூலம் தமிழ்ப்பண் பாட்டு மையத்தின் வாயிலாக நடத்தப்பெறும் குர லிசை, கருவியிசை, நாட்டுப்புறக்கலைகள், சிலம் பாட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் தமிழ் வரலாற்று மரபுடைக்கழகத்தின் வாயிலாக நடத்தப்பெற்று தமிழ்ப்பல்கலைக்கழகம் வழி தேர்வுகள் நடத்த வும் சான்றிதழ் வழங்கவும் வழங்க வகை செய்யப் படும்’’ எனத் தெரிவித்தார்.
- தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன், சிங்கப்பூர் தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகத்தின் தலைவர் ப. புருஷோத்தமனும் ஆகியோர் இவ்வொப்பந் தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
- இந்நிகழ்வில் தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர் சி.தியாகராஜன், தமிழ்ப் பண்பாட்டு மைய இணை இயக்குநர் முனைவர் செ.கற்பகம், ஏழிசை இசை ஆய்வகத்தின் இயக்கு நர் முனைவர் இராச கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர்.
-
DAILY CA TAMIL APRIL 09
BANK ACHIEVERS Achievers
-
GOMATHI
BANKING BANKING