Current Affairs

TNPSC DAILY CA APRIL 7 - Tamil


13 சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் - மத்திய அரசு

சுருக்கம்

  • சர்வதேச நாடுகளுடன், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா 13 சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, இந்தியா தனது வர்த்தக பங்காளிகளுடன் 13 சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
  • சமீபத்தில் கையெழுத்தான இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (IndAus ECTA), இந்தியா-மொரிஷியஸ் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தம் (CECPA) மற்றும் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் விரிவான கூட்டு ஒப்பந்தம் (CEPA) ஆகியவையும் அடங்கும்.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • இந்தியா 6 வரையறுக்கப்பட்ட முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த தகவலை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை மந்திரி அனுப்ரியா படேல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
  1. இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA)
  2. தெற்காசிய சுதந்திர வர்த்தகப் பகுதிக்கான ஒப்பந்தம் (SAFTA) (இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான்)
  3. இந்தியா-நேபாள வர்த்தக ஒப்பந்தம்
  4. வர்த்தகம், வியாபாரம் மற்றும் போக்குவரத்து தொடர்பான இந்தியா-பூடான் ஒப்பந்தம்
  5. இந்தியா-தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் - ஆரம்ப அறுவடை திட்டம்
  6. இந்தியா-சிங்கப்பூர் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்
  7. இந்தியா-ஆசியான் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்  - பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்)
  8. இந்தியா-தென் கொரியா விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம்
  9. இந்தியா-ஜப்பான் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம்
  10. இந்தியா-மலேசியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்
  11. இந்தியா-மொரிஷியஸ் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தம்
  12. இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் விரிவான கூட்டு ஒப்பந்தம்
  13. இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம்
  • மேற்கண்ட ஒப்பந்தங்களின் பொருளாதார தாக்க மதிப்பீட்டில், ஒப்பந்தம் செய்யப்பட்ட நாடுகளுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 

குற்றவியல் அடையாள விதிமுறை மசோதா

சுருக்கம்

  • குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் வழங்கியதையடுத்து, அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.  
  • குற்றவாளிகள், குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்படும் நபர்   ஆகியோரின் உடல் மற்றும் உயிரியல் அடையாளங்களை காவல் துறையினர் சேகரிப்பதற்கு சட்டபூர்வ ஒப்புதல் அளிக்கும் குற்றவியல் அடையாள விதிமுறை மசோதா முன்னதாக மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர்   அமித் ஷா தாக்கல் செய்தார் 
  • ‘நாட்டின் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சட்டத்தில் தொழில்நுட்ப வளா்ச்சிகளை உட்புகுத்தி விசாரணை நடைமுறையை வலுப்படுத்துவதும், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதத்தை அதிகரிப்பதும்தான் குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவின் நோக்கம். 
  • தற்போது நடைமுறையில் உள்ள கைதிகள் அடையாளச் சட்டம், 1920 ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது.
  • இது நவீன காலத்துக்குப் போதுமானதாக இல்லை.  தனிமனித உரிமையும், மனித உரிமைகளையும் மீறும் வகையில் எந்தவொரு குறைபாடுகளும் மசோதாவில் இடம்பெறாததை அரசு உறுதி செய்யும்.
  •  உடல் மற்றும் உயிரியல் அடையாளங்கள் தொடர்பான தரவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும்.
  • குற்றவியல் அடையாள விதிமுறை மசோதா அரசமைப்புக்கு முரணானது; சட்டவிரோதமானது. இந்த மசோதாவை நிறைவேற்றினால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோம்.
  •  ஒரு குற்றத்துக்கான தண்டனை ரூ.100 அபராதமாக இருந்தால், அதற்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.
  • இதுபோன்ற சட்டத்தால் ஏழ்மையானவர்களும், விளிம்பு நிலையில் உள்ளவர்களும்தான் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருப்பர் 
  • இந்தச் சட்டத்தை காவல் துறை தவறாகப் பயன்படுத்த முடியும்.  நார்க்கோ அனாலிசஸ், பாலிகிராஃப், பிஇஏபி ஆகிய உண்மை கண்டறியும் பரிசோதனைகள் சட்டவிரோதமானவை, அரசமைப்புக்கு முரணானவை என்பதே கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டின் சட்டமாக உள்ளது.
  • இந்த உண்மை கண்டறியும் பரிசோதனைகளும் குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவில் இடம்பெற்றுள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்   அவர்   இதனைத்தொடர்ந்து, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

​​​​​​​

போர்ப்ஸ் பட்டியலில்  இந்திய கோடீஸ்வரர்கள் - 2022

சுருக்கம்

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவிலேயே பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
  • உலகளவில் கோடீஸ்வரர் பட்டியலில் அமேசான் சிஇஓ ஜெப் பெசாஸ் முதலிடத்தில் உள்ளார்.
  • முகேஷ் அம்பானி ;   ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, 90.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராகவும், உலகின் பத்தாவது பணக்காரராகவும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
  • கௌதம் அதானி மற்றும் குடும்பம் :  ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான அதானி குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு $90 பில்லியன் ஆகும். அவர் உலக தரவரிசையில் 11வது இடத்தில் உள்ளார்.
  • ஷிவ் நாடார் : HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனர் நாடார், இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆவர். அவரது சொத்து மதிப்பு 22 சதவீதம் அதிகரித்துள்ளது. ஃபோர்ப்ஸ் படி, அவரது நிகர மதிப்பு $28.7 பில்லியன் ஆகும். உலக தரவரிசையில் 47வது இடத்தில் உள்ளார்

​​​​​​​​​​​​​​

பேரழிவு ஆயுதங்களுக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்கும் மசோதா

சுருக்கம்

  • பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு நிதியுதவி வழங்குவதைத் தடை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேறியது.
  • பேரழிவு ஆயுதங்கள் (சட்ட விரோதச் செயல்கள்) சட்டம், கடந்த 2005 - ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • சட்டத்தில், பேரழிவு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில், சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மக்களவையில் அந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது
  •  மசோதா மீது  நடைபெற்ற விவாதத்தின்போது, இந்த மசோதா நிறைவேறுவது காலத்தின் அவசியம் என்று கூறி கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதைத் தொடா்ந்து குரல் வாக்கெடுப்புடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. 
  • இந்த மசோதாவின் மூலம், பேரழிவு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு நிதியுதவி செய்பவர்களின் சொத்துகளை முடக்கவும் பறிமுதல் செய்யவும் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக, நடைபெற்ற விவாதத்தின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
  • சட்ட திருத்த மசோதா நிறைவேறுவதால், இந்தியாவின் தேசப்பாதுகாப்பு மேலும் வலுவடையும்; சா்வதேச அளவில் இந்தியாவின் அந்தஸ்தும் உயரும்.  அண்மைக் காலமாக, பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களின் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை  சர்வதேச அமைப்புகள் தீவிரப்படுத்தி, புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
  •  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்)ஆகியவை பேரழிவு ஆயுதங்களுக்கு நிதியுதவி வழங்குவதைத் தடை செய்துள்ளன என்றார்

 

ஆராய்ச்சி பணிகளுக்கான தேர்வு நகரங்களில் சென்னைக்கு 2வது இடம்

சுருக்கம்

  • எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக தேர்வு செய்யும் இடங்களில், அன்னிய நேரடி முதலீட்டின் மதிப்பில், சென்னை இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
  • லண்டன் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு, மாதம் இருமுறை வெளிவருகிறது, 'எப்.டி.ஐ., இன்டலிஜென்ஸ்' இதழ்.இந்த இதழில் உலக அளவில், எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தர வரிசையை, அன்னிய நேரடி முதலீட்டின் அடிப்படையில், முதல் 100 நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • குறைந்த செலவில் தரமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கான தேர்வாகவும் இது அமைந்தது.
  • ஆய்வில், உலக அளவில் அதிகம் தேர்வு செய்யும் நகர்களின் பட்டியலில், தென்கொரியா தலைநகர் சியோல் முதல் இடம் பிடித்துள்ளது.இரண்டாவது இடத்தை, இந்தியாவில் சென்னை பிடித்துள்ளது.
  • நம் நாட்டின் கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு, மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மற்றும் ஹரியானா மாநிலத்தின் குர்கான் ஆகிய நகரங்களும், அடுத்த 10 இடங் களுக்குள் உள்ளன.
  • எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் அன்னிய முதலீட்டின் அடிப்படையில், சென்னை நகரம் மட்டுமே, ஆண்டுக்கு மிகக் குறைந்த செயல்பாட்டு செலவை ஏற்படுத்துகிறது.
  • சென்னையில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் பணிபுரியும், நபர்களில் 50 பேருக்கு ஆண்டுக்கு 9.54 கோடி ரூபாய் மட்டுமே செயல்பாட்டு செலவாகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மலேஷியா நாட்டின் பினாங் நகரில் ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்; குர்கான் மற்றும் புனேவில், 11.60 கோடி ரூபாய் ஆண்டுக்கு செயல்பாட்டு செலவாக உள்ளது.இதர நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் எலட்க்ரானிக்ஸ் தொடர்பான பொருட்கள் தயாரிப்புக்கு, குறைவான செலவு ஏற்படுகிறது.
  • செமி கண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் தயாரிப்பு துறையில், ஆராய்ச்சி மற்றும் புதுமையை கண்டுபிடிப்பதே, நாட்டிற்கு முக்கியம் என, பிரதமர் மோடி ஊக்கப்படுத்தி உள்ளார் என, அந்த மாத இதழ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

​​​​​​​

உலக சுகாதார தினம் : ஏப்ரல் 7

சுருக்கம்

  • உலக சுகாதார தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார விழிப்புணர்வு தினமாகும்.
  • 2022 உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் ‘நமது கிரகம், நமது ஆரோக்கியம்’ என்பதாகும்.
  • இந்த ஆண்டின் கருப்பொருள் நமது கிரகம் மற்றும் அதில் வாழும் மனிதர்களின் நல்வாழ்வை நோக்கி உலகளாவிய கவனத்தை செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பு (WHO) 1948 இல் முதல் உலக சுகாதார சபையைக் கூட்டியது, இது "உலக சுகாதார தினத்தை நிறுவுவதற்கு அழைப்பு விடுத்தது.
  • முதல் உலக சுகாதார தினம் ஏப்ரல் 7, 1950 அன்று நடத்தப்பட்டது, அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் அந்த தேதியில் அது அனுசரிக்கப்படுகிறது.
  • உலக சுகாதார அமைப்பின் முன்னுரிமைப் பகுதியை முன்னிலைப்படுத்த ஒரு குறிப்பிட்ட சுகாதாரத் தலைப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய குறிக்கோள்.

 

 

 

 

 

 

 

BANK ACHIEVERS Achievers

  • ABILAASH

    BANK BANK

Gokhale Street, Opp Senthil Kumaran Theatre, Ram Nagar, Coimbatore, Tamil Nadu - 641009

Courses

Contact

Connect With Us
Subscribe Us