Current Affairs
TNPSC DAILY CA APRIL 05 - Tamil
பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக - முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது
சுருக்கம்:
- பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால பிரதமர் பதவிக்கு முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவின் பெயரை பிரதமர் இம்ரான் கான் பரிந்துரை செய்துள்ளார்.
- பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்தார்.
- தொடர்ந்து இம்ரான் கானின் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அறிவித்தார்.அடுத்த 90 நாட்களில் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து அடுத்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- நாடாளுமன்ற தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, அடுத்த பிரதமர் பதவியேற்கும் வரை இம்ரான் கான் தற்காலிக பிரதமராக இருப்பார் என்று தகவல்கள் தெரிவித்தன.
- நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகமும் அரசியலமைப்பு விதிகளின் படி தொடங்கியுள்ளன.
- பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான குல்சார் அகமதுவை இடைக்கால பிரதமராக நியமிக்குமாறு அதிபர் ஆரிஃப் அகமதுக்கு இம்ரான் கான் இன்று பரிந்துரைத்துள்ளார்.
- பதவியில் இருக்கும் பிரதமரின் பரிந்துரையை ஏற்று இடைக்கால பிரதமரை நியமிக்க பாகிஸ்தான் அதிபருக்கு அரசமைப்புச் சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது.
- குல்சார் அகமது இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டால், அவர் முறைப்படி பதவியேற்கும் வரை பிரதமர் பதவியில் இம்ரான் கான் நீடிப்பார் தகவல் வெளியாகியுள்ளது.
- நீதிபதி உமர் அதா பண்டியல் , "நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக பிரதமர் மற்றும் அதிபரால் வெளியிடப்படும் அனைத்து உத்தரவுகள், நடவடிக்கைகள் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது" என்றார்.
- மேலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம் என்று அனைத்துத் தரப்பினருக்கும் உத்தரவிட்டார்.
தமிழக பொருளாதார ஆலோசனை குழுவில் 'ஐவர்'
சுருக்கம்:
- கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு அமைத்துள்ளது
- தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும்பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு நிறுவும் என்று அறிவிக்கப்பட்டது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- தமிழகத்தின் 16வது சட்டசபையின் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 21) கவர்னர் உரையுடன் துவங்கியது. அதில், முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழு குறித்த தகவல்களே இப்போது ‛ஹாட் டாபிக்'காக உள்ளது.
- தமிழகத்தின் பொருளாதாரம் மற்றும் நிதிநிலை மோசமான நிலையில் இருப்பதால், இந்த குழுவின் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
- அதற்கு மற்றொரு காரணம், இதில் இடம்பெற்றுள்ள 5 பேர் தான்.அந்த அறிவிப்பின்படி, திரு.அரவிந்த் பி. டட்டார், மூத்த வழக்கறிஞர்,உச்சநீதிமன்றம் அவர்களின் தலைமையில் கீழ்க்கண்ட உறுப்பினர்களுடன் அரசு ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
- திரு. கி . வைத்தீஸ்வரன், வழக்கறிஞர், சென்னை
- உயர் நீதிமன்றம்.திரு. ஜி. நடராஜன், வழக்கறிஞர்,
- சென்னை உயர் நீதிமன்றம்.திரு. சுரேஷ் ராமன்,
- துணைத் தலைவர் மற்றும் மண்டலத் தலைவர்,
- டிசிஎஸ் - சேவைப் பிரிவு.திரு. ஸ்ரீவத்ஸ் ராம்,
- மேலாண்மை இயக்குநர், வீல்ஸ் இந்தியா லிட்.,
- திரு. கே. வேல்முருகன், தலைவர்,
- ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் அமைப்பு.
இந்திய மாநிலம் நாட்டிலேயே குறைந்த வேலையின்மை விகிதம்
சுருக்கம்:
- கிழக்கு-மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்திய மாநிலமான சத்தீஸ்கர், நாட்டின் மிகக் குறைந்த வேலையின்மை விகிதத்தைக் கொண்டுள்ளது.
- அரசாங்கத் தரவுகளின்படி இது 32.19 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் கோண்ட், கன்வார் மற்றும் உரான் போன்ற பழங்குடியினர் 30.6% ஆவர்.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- கடந்த சில ஆண்டுகளாக, மாநில அரசு தனது இளைஞர்களுக்காக பல வேலைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கு (MGNREGA) இணங்குவதாக, ஒரு சுதந்திரமான சிந்தனைக் குழுவான இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது.
- இந்தியாவின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 7.8% ஆக இருந்தாலும், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சத்தீஸ்கரின் வேலையின்மை விகிதத்தை 0.6% ஆகக் குறைக்க இந்தத் திட்டங்கள் உதவியதாகத் தெரிகிறது.
- பொருளாதாரம், பொருளாதாரத்தை உயர்த்துதல் என்ற மேலோட்டமான நோக்கத்தின் கீழ், கோதன் நியாய யோஜனா, தேயிலை-காபி வாரியத்தின் அமைப்பு, மீன்வளம் மற்றும் விவசாயத்தின் சம அந்தஸ்து, தினை மிஷன் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை மாநில அரசு உருவாக்கியுள்ளது.
- வணிகத் தோட்டம்,” என்று ராய்பூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் மூத்த ஆசிரியர் சஞ்சீவ் பிரஷர், கடந்த மாதம் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் எழுதினார்.
- மறுபுறம், ஹரியானா 26.7% இல் முதலிடத்திலும், ராஜஸ்தான் (25%), ஜம்மு மற்றும் காஷ்மீர் (25%), மற்றும் ஜார்கண்ட் (14.5%) தொடர்ந்து உள்ளன.
- இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய வேலையின்மை விகிதம் 2020 இல் கோவிட் -19 தொற்றுநோயின் முதல் அலையின் போது கடுமையாக உயர்ந்தது, பூட்டுதல்கள் மற்றும் பொருளாதார செயல்பாடுகள் குறைக்கப்பட்டன.
- இது நகர்ப்புறங்களில் (மார்ச் மாதத்தில் 8.6%) கிராமப்புறங்களில் (7.3%) அதிகமாக இருந்தது. இது வேலை வாய்ப்புகள் இல்லாமை, அதிக வேலைக்கு அமர்த்துவதற்கு முதலாளிகளின் தயக்கம் மற்றும் நெரிசலான பகுதிகளில் உள்ள தொழிலாளர்களிடையே அதிகரித்த இடர் வெறுப்பு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தவிர, இந்தியாவில் நகர்ப்புற தொழிலாளர்களுக்கு MNREGA போன்ற திட்டங்கள் எதுவும் இல்லை.
கிராமி விருது வென்ற இந்தியர் விருது
சுருக்கம்:
- இந்தியாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் ரிக்கி கெஜ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எழுத்தாளர், நீலா வாஸ்வானி ஆகியோருக்கு 'கிராமி' விருது கிடைத்து உள்ளது.
- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறந்த இசைக்கான 57வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறந்த இசைக்கான 57வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது மொத்தம் 88 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
- அவற்றில் புதுயுக இசைப் பிரிவில் ரிக்கி கெஜ், தென்னாப்ரிக்க புல்லாங்குழல் கலைஞர் வவ்டர் கெல்லர் மேன் உடன் இணைந்து தயாரித்த 'விண்ட்ஸ் ஆப் சம்சாரா' என்ற ஆல்பம் கிராமி விருதை தட்டிச் சென்றது.
- இது, ரிக்கியின், 14வது இசை ஆல்பம். பெங்களுரைச் சேர்ந்த ரிக்கி கெஜ், பல கன்னட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
- சிறந்த குழந்தைகள் இசைக்கான பிரிவில் நீலா வாஸ்வானியின், 'ஐ ஆம் மலாலா' கிராமி விருது வென்றது. இதே பெயரில் வெளிவந்த தன் புத்தகத்தை இசையுடன் கூடிய உரைநடை வடிவில் நீலா வாஸ்வானி மாற்றி அமைத்திருந்தார். சிந்தி தந்தைக்கும், ஐரிஷ் - அமெரிக்க தாய்க்கும் பிறந்த நீலா, பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
- கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மறைந்த சிதார் இசைக் கலைஞர் ரவி சங்கரின் மகள் அனுஷ்கா சங்கரின் 'டிரேசஸ் ஆப் யு' இசை ஆல்பம், விருது பெறும் வாய்ப்பை இழந்தது.
புதிய வெளியுறவு செயலாளர் - வினய் மோகன் குவாத்ரா நியமனம்
சுருக்கம்:
- புதிய வெளியுறவு செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது நேபாளத்திற்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா உள்ளார்.
- மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக தற்போது ஹர்ஷ்வர்தன் ஷிரீங்கலா பணியாற்றி வரும் நிலையில், வரும் ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் அவர் ஒய்வு பெறுகிறார். இதனையடுத்து, தற்போது புதிய வெளியுறவுத்துறை செயலாளரை மத்திய அரசு நியமித்துள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- 30ல் பொறுப்பேற்கிறார்.கடந்த 1988ல் இந்திய வெளியுறவு பணியில் சேர்ந்த வினய் மோகன், 2017 - 2020 வரை பிரான்சு நாட்டின் இந்திய துாதராக பதவி வகித்தார்.
- வெளியுறவுப் பணியில் 32 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், 2015 - 2017 வரை பிரதமர் அலுவலக இணைச் செயலராகவும் பணி புரிந்துள்ளார்.
- மத்திய வெளியுறவுத்துறை செயலராக தற்போது ஹர்ஷ்வர்தன் ஷிரீங்கலா பணியாற்றி வரும் நிலையில், வரும் ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் அவர் ஒய்வு பெறுகிறார்.
- தற்போது புதிய வெளியுறவுத்துறை செயலாளரை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
- நேபாளம் நாட்டிற்கான இந்திய தூதராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நரிக்குறவர், இருளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா
சுருக்கம்:
- பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள். சாதிச் சான்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மருத்துவமனை அருகே நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் 81 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது
முக்கிய சிறப்பம்சங்கள்:
- விளிம்பு நிலையில் உள்ள 57,978 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- கடந்த காலங்களில் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக ஏற்கனவே தனிநபர்களிடம் இருந்து நிலஎடுப்பு செய்யப்பட்ட நிலங்கள் மற்றும் ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டிருந்தது.
- ஒரு பகுதியாக, இதுவரை சுமார் 11,873 ஹெக்டேர் ஆதிதிராவிடர் நலத்துறை நிலங்களும், சுமார் 2,668 ஹெக்டேர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நிலங்களும் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளன.
- ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த நிலங்களில் மொத்தம் 2,35,890 பயனாளிகளும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்ந்த நிலங்களில் 41,573 பயனாளிகளும் என மொத்தம் 2,77,463 பயனாளிகள் வீடுகட்டி வசித்து வருகிறார்கள்.
- புதிய பயனாளிகளை கண்டறியும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 31.3.2022 வரை மொத்தம் 43,911 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
- 2022-23ம் நிதியாண்டில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க மீதமுள்ள 2,33,552 குடும்பங்களுக்கும் இணையவழி பட்டாக்கள் வழங்கப்படும்.
யமனம்
-
DAILY CA APRIL 05 -TAMIL
TNPSC ACHIEVERS Achievers
-
NAMACHIVAYAM
TNPSC TNPSC