Current Affairs
TNPSC DAILY CA -APRIL 03 - Tamil
அமெரிக்க ஆளுமைகளான இந்தியர்கள்
சுருக்கம்:
- அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளிகளில் குறைந்தது 20 பேர்களுக்கு அமெரிக்க அரசு நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளுக்காகத் தேர்வு செய்துள்ளார். இந்த 20 நபர்களில் 13 பேர்கள் இந்திய வம்சாவளி பெண்களாவர்.
- பைடன் தெரிவு செய்தவர்களில் இரண்டு காஷ்மீர் பெண்களும் அடக்கம். கடந்த ஜனவரி 20 -ஆம் தேதி அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அமெரிக்காவின் 46-ஆவது அதிபர் ஆனார்.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- அமெரிக்க சரித்திரத்தில் முதல் முறையாகப் பெண் ஒருவர் துணைஅதிபராகப் பொறுப்பு ஏற்றுள்ளார். அந்தப் பெருமையை பெற்றவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 56 வயதான கமலா ஹாரிஸ் .
- அமெரிக்க மக்கள் தொகையில் இந்திய வம்சாவளியினர் ஒரு சதவீதம் உள்ளனர். இருந்தாலும், இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் இந்திய வம்சாவளியினருக்கு வழங்காத முக்கியத்துவத்தை ஜோ பைடன் அளித்துள்ளார்.
- முந்தைய அமெரிக்க அதிபர்கள் ஒரு சில இந்திய வம்சாவளியினருக்கு மட்டுமே நிர்வாகப் பொறுப்புகளை வழங்கி வந்துள்ளனர். பைடன் அந்த மரபிலிருந்து விலகி 20 பேர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்.தேர்வு செய்திருக்கும் 20 இந்திய வம்சாவளியினரில் 17 பேர்களுக்கு வானளாவிய அதிகாரம் குவிந்திருக்கும் வெள்ளைமாளிகை நிர்வாகத்தில் நேரடி தொடர்புடையவர்கள் இது ஒரு மகத்தான மாற்றம்.
- பைடனின் இந்த இந்திய ஆதரவு நிலை, கமலா ஹாரிûஸ துணை அதிபராகத் தெரிவு செய்ததிலிருந்து வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது.
- டாக்டர் விவேக் மூர்த்தி என்பவரை பைடன் அமெரிக்க அறுவை சிகிச்சை மருத்துவ அமைப்பின் தலைவராக்கியுள்ளார். தமிழ்நாடு வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நாட்டவர்.
- அமெரிக்க தேசிய பொருளாதாரக் குழுமத்தின் துணை இயக்குநராகப் பொறுப்பு ஏற்பவர் பரத் ராமமூர்த்தி.ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது அதிபரது அலுவலகத்தில் துணை இயக்குநராக இருந்த கவுதம் ராகவன் பைடன் நிர்வாகத்தில் பங்கேற்க மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வந்திருக்கிறார்.
சங்க கால பாண்டிய மன்னர்களின் நாணயங்கள்
சுருக்கம்:
- தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. 146 ஆண்டு கால அகழாய்வு வரலாற்றில் முதல்முறையாக சங்ககால பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது.
- தமிழர் வரலாற்றை மீள் உருவாக்கம் செய்யும் வகையில், கீழடியில் அகழாய்வுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருப்பதைப் போலவே, வேறு பல வடிவங்களிலும் வரலாற்று ஆய்வுகள் தமிழகத்தில் நடந்து வருகின்றன.
- குறிப்பிடத்தக்க ஆய்வுகளாக கல்வெட்டு மற்றும் நாணய ஆய்வுகள் உள்ளன.நாணயத்தில் கடல் ஆமைகள் உருவம், மரம், யானை, மீன்களின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
- கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, கொடிசியா வளாகத்தில் பல்வேறு தலைப்புகளில், தமிழ் ஆய்வரங்குகள் நடந்து வருகின்றன.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- நாணயவியல் துறையில், சங்ககால சோழர் நாணயத்தில் முதல் முறையாக ஒரு மனித உருவம் தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. கி.மு. 4ஆம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி.1867ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரசர்களும் தங்கள் நாணயங்களை வெளியிட்டு உள்ளனர்.
- கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலான சங்க காலத்தில் தமிழகத்தில் புழங்கிய நாணயங்கள் 'சங்க காலத் தமிழகக் காசுகள்' என்று அழைக்கப்படுகின்றன.
- நாணயங்கள் பெரும்பாலும் செம்பினால் செய்யப்பட்டவை, சதுர வடிவானவை. அரிதாக வெள்ளி நாணயங்களும், வட்ட வடிவ நாணயங்களும் கிடைப்பது உண்டு.
- வட்ட வடிவ நாணயங்கள் கி.பி. 1-3ஆம் நூற்றாண்டில் வெளியான பிற்பகுதி சங்க கால நாணயங்களாக கருதப்படுகின்றன .
- சங்க கால நாணயங்களில், சங்க கால சேரர்கள் வெளியிட்ட நாணயங்கள், சங்க காலப் பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்கள், சங்க கால சோழர்கள் வெளியிட்ட நாணயங்கள், மலையமான் என்ற குறுநில மன்னர் வெளியிட்ட நாணயங்கள், அதிரன் எதிரான் சேந்தன் என்ற ஒரு குறிப்பிட்ட குறுநில மன்னன் வெளியிட்ட நாணயங்கள் என்று மொத்தம் 5 வகையான நாணயங்கள் கிடைத்துள்ளன.
இலங்கை:அரிசி அரசியல்
சுருக்கம்:
- இலங்கை மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி வழங்குவ தற்குத் தேவையான அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- இந்தியாவிலிருந்து 300,000 மெற்றிக் தொன் அரிசியை விரைவாக இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- 1948இல் இலங்கை தனது அபிவிருத்திப் பயணத்தை ஆரம்பித்தபோது ஏனைய காலனித்துவ நாடுகளுக்கு அமைந்திராத சில அடிப்படை நிபந்தகைளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தது என்பது வெளிப்படையானது தான்.
- அதேவேளை ஒரு சுதந்திர நாடாக முன்னோக்கி நகருவதில் இலங்கைக்கு எவ்வித சவால்களும் இருக்கவில்லை என்பது அதன் அர்த்தமல்ல. வாய்ப்புகளைப் போன்றே சவால்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது.
- 1950களில் உலக உணவுப் பொருள்விலைகள் சடுதியாக அதிகரித்துச் சென்றன. இதனால் உணவு இறக்குமதிக்காகப் பெருந்தொகைப் பணத்தை செலவிட நேர்ந்தது. சனத்தொகை அதிகரிப்பு எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது.
- மானிய விலையில் உணவுப் பங்கீட்டுத் திட்டம் அதற்கு காற்று ஊதி பெருநெருப்பாக்கியது. உணவு மானியத்திற்கான அரசாங்க செலவீடுகள் அதிகரித்துச் சென்றன.
- சம்பா அரிசிக்குப் பதிலாக இரு இலட்சம் மெற்றிக் தொன் நாட்டு அரிசியும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் GR 11 (Short Grain Rice) அரிசியும் இறக்குமதி செய்யப்படும்.
- வெளிச்சந்தையில் போதுமான அளவு அரிசி இருப்பை பேணும் வகையில் அரிசியை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்மொழிந்துள்ளார்.
- இரசாயன உரத் திட்டம் ஒரு நல்ல வேலைத்திட்டம் எனவும், ஆனால் அதன் முடிவுகளை தற்போது காணக் கூடியதாக அமைந்துள்ளதாக முன்னணி வர்த்தகர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
- தற்போதைய அரிசியின் விலை மேலும் உயராது என்றும் இதுவே அதிகபட்ச விலையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த அதிகள வில் நெல் பயிரிட வேண்டும் என்றும், ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெல் உற்பத்தி குறைவுக்கான பொறுப்பைத் தான் ஏற்க முடியாது என்றும், அது தனது பிரச்சினை யல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பண்டிட்கள் மறுவாழ்வு மசோதா:
சுருக்கம்:
- கடந்த 1990-களில் தீவிரவாதத் தால் காஷ்மீரை விட்டு லட்சக்கணக்கான பண்டிட் சமூகத்தினர் வெளியேற்றப்பட்டனர்.
- ‘காஷ்மீர் பண்டிட்கள் (உதவி, மறுசீரமைப்பு, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம்) சட்டம் 2022' என்ற தலைப்பில் மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் விவேக் தன்கா நேற்று முன்தினம் தனிநபர் மசோதா கொண்டு வந்தார்.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- பண்டிட் சமூகத்தினருக்கு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மறுவாழ்வு அளிப்பது, அவர்களின் சொத்துகளை பாதுகாப்பது, அவர் களின் கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுப்பது, பாதுகாப்பை உறுதிசெய்வது, அவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற நிதி வழங்குவது ஆகியவற்றுக்கு இந்த மசோதா வகை செய்கிறது.
- 1988 தொடங்கி, காஷ்மீர் பள்ளத் தாக்கில் பண்டிட்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் அவலங்கள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தும் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுவதும் மசோதாவில் அடங்கும்.உச்ச நீதிமன்ற மூத்த வழக் கறிஞரான விவேக் தன்கா ஜூன் மாதம் எம்.பி. பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
- ம.பி.யில் இருந்து காங்கிரஸ் மீண்டும் தேர்வு செய்யாவிட்டால் இந்த மசோதா காலாவதியாகிவிடும்.
- காஷ்மீர் பண்டிட் சமூகத்தை வழிநடத்தும் ஒரு பிரதான அமைப்பான பனுன் காஷ்மீரின் மூத்த தலைவர் டாக்டர் அக்னிஷேகர், "மத்திய அரசு இதுபோன்ற ஒரு வரலாற்று முடிவை 2019 ஆகஸ்ட் 5 அன்று எடுத்தது.
- கடந்த ஒரு வருடமாக காஷ்மீர் பண்டிட்களின் மறுவாழ்வுக்காக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
காற்றாலைகளுக்கு அருகில் 'சோலார்' மின் உற்பத்தி திட்டம்
சுருக்கம்:
- காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ள கன்னியாகுமரி - முப்பந்தல் உள்ளிட்ட இடங்களில், 'சோலார்' எனப்படும், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, தமிழக மின் வாரியம் முடிவு செய்து உள்ளது.
- தமிழகத்தில், 8,606 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதில், 17 மெகா வாட் திறன் உடைய மின் நிலையங்கள் மட்டுமே, மின் வாரியத்திற்கு சொந்தமானவை. மற்றவை, தனியார் நிறுவனங்களால் அமைக்கப்பட்டு உள்ளன.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- மே மாதம் முதல் செப்., வரை காற்றாலை சீசன். அந்த காலத்தில் மட்டும், காற்றாலைகளில் இருந்து, அதிக மின்சாரம் கிடைக்கும்.
- கன்னியாகுமரி மாவட்டம், முப்பந்தல்.மதுரையில், புலியங்குளம்; துாத்துக்குடியில், முள்ளக்காடு, கயத்தாறு; திருப்பூரில், கேதானுார்; கோவையில், சுல்தான்பேட்டை ஆகிய இடங்களில் காற்றாலைகளை வாரியம் அமைந்துள்ளது1990 காலகட்டத்தில் அமைக்கப்பட்டவை. அவற்றில் இருந்து மிகவும் குறைந்தளவில் தான் மின்சாரம் கிடைக்கிறது.
- மின் வாரியத்தின் காற்றாலைகள் அமைந்துள்ள வளாகங்களில், பல ஏக்கரில் காலி இடங்கள் உள்ளன.தனியார் நிறுவனங்கள், தங்களின் காற்றாலைகள் அருகில் உள்ள காலி இடங்களில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கின்றன.
- ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேலாக சூரியசக்தி மின்சாரம் கிடைக்கிறது.முப்பந்தல், கயத்தாறு, சுல்தான்பேட்டை, கேதானுார் ஆகிய இடங்களில் உள்ள காற்றாலைகளுக்கு அருகில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
- காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்து செல்ல, ஏற்கனவே மின் வழித்தட கட்டமைப்புகள் உள்ளன. இதனால், அந்த இடங்களில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் போது, மின் வழித்தடங்களுக்கு அதிக செலவாகாது.பல ஆண்டுகளுக்கு முன் மிக குறைந்த திறனில் அமைக்கப்பட்ட காற்றாலைகளுக்கு பதிலாக, அதிக திறன் உடைய காற்றாலை மின் நிலையங்களை அமைக்கவும், மின் வாரியம் திட்டமிட்டு உள்ளது.
- ஒரே இடத்தில் பகலில் சூரியசக்தி மின்சாரமும், இரவில் காற்றாலை மின்சாரமும் கிடைக்கும். இரண்டு வகை மின்சாரமும் சுற்றுச்சூழலை பாதிக்காது .
நாட்டின் அந்நிய செலாவணி -சரிந்தது
சுருக்கம்:
- நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 62,227 கோடி டாலராக சரிவடைந்ததாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.
- உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக சா்வதேச அளவில் பங்குச் சந்தைகள் தொடர் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன.
- முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் தொடா்ந்து திரும்பப் பெற்று வருகின்றனர். அதன் காரணமாக வெளிநாட்டு முதலீடுகளும் வெளியேறி வருகின்றன.
முக்கிய சிறப்பம்சங்கள்:
- கடந்த நவம்பர் 19-ம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 640.4 பில்லியன் டாலராக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பை அதிகம் கொண்டிருக்கும்.
- நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-ம்இடத்தில் உள்ளது. சீனா, ஜப்பான்சுவிட்சர்லாந்து ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன.=
- 2014-15 முதல் 2020-21 வரையிலான ஏழு ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருட்கள் மூலம் ரூ.16.7 லட்சம் கோடி கலால் வரி பெறப்பட்டுள்ளது.
- 2013-14-ல் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.9.2, டீசலுக்கு ரூ.3.46 ஆக இருந்தது. தற்போது இது முறையே ரூ.27.9, ரூ.21.80 ஆக உள்ளது
- கச்சா எண்ணெய் விலை சா்வதேச அளவில் அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிவடைந்துள்ளது.
- இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 964.6 கோடி டாலா் அளவுக்கு சரிந்ததாக ஆா்பிஐ தெரிவித்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு 62,227.5 கோடி அமெரிக்க டாலராக உள்ளது.
- யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட வெளிநாட்டு செலாவணி சொத்துகளில் (எஃப்சிஏ) ஏற்பட்ட சரிவே அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது. கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ கையிருப்பு 1,110.8 கோடி டாலா் அளவுக்கு சரிந்து 55,435.9 கோடி டாலராக உள்ளது.
- தங்கத்தின் கையிருப்பு 152.2 கோடி டாலா் உயா்ந்து 4,384.2 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்தது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 514.6 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
-
DAILY CA - APRIL TAM 03
BANK ACHIEVERS Achievers
-
DEVI ABIRAMI
BANKING BANKING