Current Affairs

TNPSC DAILY CA APRIL 2 - Tamil

 


ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்

சுருக்கம்

  • 'யுனெஸ்கோ' அங்கீகாரம் பெறுவதற்கான பட்டியலில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலும், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பொற்கோவிலும் இடம் பெற்றுள்ளதாக, மத்திய கலாசார அமைச்சம் தெரிவித்துள்ளது.
  • உலக அளவில் பாரம்பரிய, கலாசார இடங்களை கண்டறிந்து, அதை யுனெஸ்கோ அமைப்பு அடையாளப்படுத்தி வருகிறது

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • பூலோக வைகுண்டம் என்ற சிறப்பு பெற்றதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், ஆன்மிகம், சுற்றுலா மற்றும் புராதன முக்கியத்துவம் கொண்ட சிறப்புடையதாகும்.
  • வைழிபாட்டுக்குரிய சன்னதிகள் 36 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 54 சன்னதிகள் கொண்ட பிரமாண்டமான இக்கோவில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
  • ஸ்ரீரங்கத்தின் முக்கிய வீதிகளுடன் ஊரே கோவிலுக்குள் அடக்கம் என்ற சிறப்பும் இக்கோவிலுக்கு பொருந்தும்.
  • இந்தியாவில் உள்ள பாரம்பரிய இடங்களை, மத்திய அரசின் கலாசார அமைச்சகம் பட்டியலிட்டு, யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது.சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ஜெகன்நாத் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.
  • இவர், தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் 25 இடங்களை பட்டியலிட்டார்.
  • அவற்றுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற, மத்திய கலாசார அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். அதற்கு மத்திய கலாசார அமைச்சகம், அவருக்கு பதில் அனுப்பியுள்ளது.
  • இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் இடங்கள் குறித்து ஆய்வு செய்தேன். சென்னை உயர் நீதிமன்ற பாரம்பரிய கட்டடங்கள், கொல்லிமலை, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், கடலுார் பண்ருட்டியில் உள்ள திருவதிகை கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்.
  • மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில், சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பொற்கோவில் உள்ளிட்ட 25 இடங்களின் விபரங்களுடன், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்

 

உயர்நீதிமன்றங்களில் ஓராண்டில் 27 பெண் நீதிபதிகள் நியமனம்: மத்திய அரசு

சுருக்கம்

  • உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஓராண்டில் 39 பெண்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரைத்த நிலையில், அவா்களில் 27 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்
  • மீதமுள்ள 12 பெண்களின் நியமன நடைமுறைகள் பல்வேறு நிலைகளில் உள்ளன என்று மத்திய அரசு சார்பில் மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் இடம் காலியாகியுள்ளதையடுத்து, 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கி கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
  • 3 பெண் நீதிபதிகளில் ஒருவரான கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்னா 2027-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக வரக்கூடும்.
  • அவ்வாறு தலைமை நீதிபதியாக வந்தால், இந்திய வரலாற்றில் முதல் பெண் தலைமை நீதிபதியாக நாகரத்னா இருப்பார்.
  • கடந்த 12-ம் தேதி உச்ச நீதிபதியாக இருந்த ஆர்எப் நாரிமன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நீதிபதிகள் எண்ணிக்கை 25 ஆகக் குறைந்தது. 34 நீதிபதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 25 ஆகச் சரிந்தது.
  •  கடந்த 2019-ம் ஆண்டு, மார்ச் 19-ம் தேதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்றுச் சென்றபின் இதுவரை எந்த நீதிபதிகள் நியமனமும் நடக்கவில்லை
  • இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, மூத்த நீதிபதிகள் யு.யு.லலித், ஏஎம்கான்வில்கர், டிஒய் சுந்திரசூட், எல் நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் 3 பெண் நீதிபதிகள் உள்ளிட்ட 9 நீதிபதிகள் அடங்கிய பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
  • நீதிபதிகள் அல்லாத ஒருவர் மூத்த வழக்கறிஞர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பிஎஸ் நரசிம்மா உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
  • கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபெய் ஸ்ரீநிவாஸ், குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கம் உயர் நீதிமன்ற தலைம நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, கேரள
  • உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமார், மற்றொரு கேரள நீதிபதி எம்எம் சுந்தரேஷ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

 

தில்லியை போன்று தமிழகத்திலும் மாதிரிப் பள்ளிகள்

சுருக்கம்:

  • தில்லியைப் போன்று தமிழகத்திலும் மாதிரிப் பள்ளி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தில்லி அரசின் மாதிரிப் பள்ளியைச் பாா்வையிட்ட முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
  •  மேற்கு வினோத் நகரில் அமைந்துள்ள தில்லி அரசின் ராஜ்கியா சா்வோதயா பால் வித்யாலயா பள்ளிக்கு நேரில் சென்றாா். அவரை துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வரவேற்றாா்.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • பள்ளியில் உள்ள வகுப்பறைகள், நீச்சல் குளம், பிசினஸ் பிளாஸ்டா்ஸ் திட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் தொழில்முனைவு மாணவா்கள் காட்சிப்படுத்தியிருந்த தொழில் அரங்கு ஆகியவற்றை முதல்வா் மு.க. ஸ்டாலின் நேரில் பாா்வையிட்டாா்.
  • மாணவ, மாணவியருடன் கலந்துரையாடி பாராட்டி ஊக்குவித்தாா். அவருடன் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, பள்ளி முதல்வா் ஜோத்ஸ்னா மின்ஜ் ஆகியோா் உடன் சென்று விவரங்களை எடுத்துக் கூறி விளக்கினா்
  • ஆம் ஆத்மி ஆட்சியில் கல்வி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தமிழக முதல்வரிடம் தில்லி அரசின் கல்வித் துறை அதிகாரி விளக்கினாா். அவா்
  • தில்லி அரசு கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக கல்விக்காக தனது பட்ஜெட்டில் 25 சதவீதத்தை தொடா்ந்து செலவழித்து வருகிறது. 2014-15-ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பில் 88 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றிருந்தனா்.
  • தனியாா் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. இந்த நிலையில், 2019-20-இல் அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 98 சதவீதமாக இருந்தது.
  • அதே வேளையில், தனியாா் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 92 சதவீதமாக மட்டுமே இருந்தது’ என்று முதல்வா் ஸ்டாலினிடம் அவா் தெரிவித்தாா்.

 

அல் ரிஹ்லா கால்பந்து

சுருக்கம்

  • அல் ரிஹ்லா என்பது FIFA உலகக் கோப்பைக்காக அடிடாஸ் உருவாக்கிய 14வது பந்தாகும்.
  • அடிடாஸ் அல் ரிஹ்லாவை வெளிப்படுத்துகிறது – இது FIFA உலகக் கோப்பை கத்தார் 2022க்கான அதிகாரப்பூர்வ மேட்ச் பந்தாகும்.
  • அடிடாஸ் FIFA உலகக் கோப்பைக்காக உருவாக்கிய 14 வது பந்தாகும், இது விமானத்தில் வேகமாகப் பயணிப்பதால் அதிக வேகத்தில் விளையாட்டை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    முக்கிய சிறப்பம்சங்கள்:

  • அரபு மொழியில் "பயணம்" மற்றும் கட்டிடக்கலை, சின்னமான படகுகள் மற்றும் கத்தாரின் கொடி ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டது.
  • பந்து அதன் இதயத்தில் சுற்றுச்சூழலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது -
  • அனைத்து கூறுகளும் கவனமாக பரிசீலிக்கப்பட்டுள்ளன, மேலும் அல் ரிஹ்லா என்பது நீர் சார்ந்த மைகள் மற்றும் பசைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட முதல் உலகக் கோப்பை பந்து ஆகும்.
  • தடிமனான, துடிப்பான வண்ணம் மற்றும் கிராபிக்ஸ் ஒரு முத்து பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது
  • உலகக் கோப்பை நவம்பர் முதல் டிசம்பர் 2022 க்கு இடையில் நடைபெறும், போட்டியின் குழு நிலைகளில் அவர்கள் யாரை எதிர்கொள்கிறார்கள் என்பதை அனைத்து அணிகளும் அறிந்து கொள்ளும்.
  •  மொத்தம் 32 அணிகள் போட்டியிடும், அதில் 29 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, மேலும் மூன்று இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.
  • கத்தாரில் தனது பயணத்தைத் தொடங்கும் அல் ரிஹ்லா, உலகக் கோப்பையின் சிறந்த வீரர்களுடன் இணைந்து, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆர்வமுள்ள பெண் கால்பந்து வீராங்கனைகள் மற்றும் ஆஸ்பியர் அகாடமியைச் சேர்ந்த சில இளம் அடுத்த தலைமுறை வீரர்களைக் கொண்ட பலதரப்பட்ட திறமைகளின் கலவையால் ஆடுகளத்தில் இணைக்கப்படும்.

 

குடியரசு தலைவர் கோவிந்த துர்க்மெகிஸ்தான் பயணம்

சுருக்கம்

  • வளங்கள் நிறைந்த மத்திய ஆசிய நாட்டுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துர்க்மென் ஜனாதிபதி செர்தார்பெர்டிமுஹமடோவை சந்தித்தார். துர்க்மெனிஸ்தானுக்கு இந்திய ஜனாதிபதியின் முதல் பயணம் இதுவாகும்.
  •  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக துர்க்மெனிஸ்தானுக்கு சென்றார்
  •  துர்க்மென் ஜனாதிபதி செர்தார் பெர்டிமுஹமடோவைச் சந்தித்து வளங்கள் நிறைந்த மத்திய ஆசிய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பார்.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • சுதந்திர துர்க்மெனிஸ்தானுக்கு இந்திய ஜனாதிபதியின் முதல் வருகை இதுவாகும் மற்றும் புதிய துர்க்மென் ஜனாதிபதி பெர்டிமுஹமடோவ் பதவியேற்ற பிறகு இது வருகிறது.
  • ஜனாதிபதி கோவிந்த் தனது இரு நாட்டுப் பயணத்தின் முதல் பாகமாக அஷ்கபாத் வந்தடைந்தார். துர்க்மென் பாரம்பரியத்தின்படி, ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் குழந்தைகள் ரொட்டி மற்றும் உப்பு வழங்கப்பட்டது".
  • துர்க்மெனிஸ்தானுடனான உறவுகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
  • "ஜனாதிபதியின் அரசுப் பயணம், இருதரப்பு மட்டுமன்றி, இந்தியா-மத்திய ஆசியா கூட்டுறவில் நமது விரிவாக்கப்பட்ட அண்டை நாடுகளின் கருத்து மற்றும் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் துர்க்மெனிஸ்தானுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும்" என்று MEA இன் மேற்கு செயலாளர் சஞ்சய் வர்மா கூறினார்.
  • "துர்க்மெனிஸ்தான் மூலோபாய ரீதியாக மத்திய ஆசியாவில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் இணைப்பு என்பது துர்க்மெனிஸ்தானுடனான கூட்டு ஈவுத்தொகையை வழங்கும்.
  • துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா (TAPI) பைப்லைன் பிரச்சினை பேச்சுவார்த்தையின் போது வரலாம். துர்க்மென் தலைமையுடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் இடம்பெறும் என்றும் கூறினார்.

 


ரஷ்யாவிடம் கச்சா எண்ணை கொள்முதல் தொடரும்

சுருக்கம்:  

  • இந்தியாவின் ஒட்டுமொத்த நலனை கருத்தில் கொண்டே, ரஷியாவிடமிருந்து சலுகை விலையில் எண்ணெய் வாங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
  • நமது எரிபொருள் பாதுகாப்பே நமக்கு அனைத்தையும் விட முக்கியம். சலுகை விலையில் எரிபொருள் கிடைக்கும்

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • இந்தியாவின் ஒட்டுமொத்த நலனை கருத்தில் கொண்டே, ரஷியாவிடமிருந்து சலுகை விலையில் எண்ணெய் வாங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
  • நமது எரிபொருள் பாதுகாப்பே நமக்கு அனைத்தையும் விட முக்கியம். சலுகை விலையில் எரிபொருள் கிடைக்கும் போது, ஏன் அதனை நாம் வாங்கக் கூடாது?  நாம் ரஷியாவிடமிருந்து எரிபொருள் வாங்க ஆரம்பித்துவிட்டோம்.
  • ஒரு சில பேரல்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 - 4 நாள்களில் விநியோகம் தொடங்கும், பிறகு இது தொடரும். இந்த முடிவு, இந்தியாவின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில் கொண்டுதான் எடுக்கப்பட்டுள்ளது”.
  • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
  • இதனையும் மீறி ரஷியாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய  இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு அமெரிக்கா விமர்சனங்கள் முன்வைத்திருந்த நிலையில், இந்தியா மேற்கண்ட பதிலை அளித்துள்ளது.

 

 

 

 

 

 

 

TNPSC ACHIEVERS Achievers

  • BANU PRIYA

    TNPSC TNPSC

Gokhale Street, Opp Senthil Kumaran Theatre, Ram Nagar, Coimbatore, Tamil Nadu - 641009

Courses

Contact

Connect With Us
Subscribe Us