Current Affairs

TNPSC CA - Tamil

வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து

சுருக்கம்: 

  • வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்து செய்தது செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை உயர் நீதிமன்றம் பட்டியலிட்டுள்ள காரணங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்து இருப்பது மனநிறைவளிக்கிறது
  • தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
  • தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையில், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.இது தொடர்பான அரசாணை திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது
  • 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
  • வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
  • 10.5% உள் ஒதுக்கீடு ரத்து: தி.மு.க மீது பாயும் வன்னியர் அமைப்புகள்  
  • வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ''சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்
  • விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஷ்வர ராவ் மற்றும் பி. ஆர் கவாய் ஆகியோரின் முன்னிலைக்கு விசாரணை வந்தது.
  • வழங்கப்பட்ட தீர்ப்பில், 'மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்கள் தனிப்பிரிவாக பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான தரவுகளை கொடுப்பதற்கு தமிழக அரசு தவறிவிட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், இதை சமூக நீதிக்கு எதிராக தீர்ப்பாக பார்ப்பதாக தெரிவித்தார்.
  • "வன்னியர்களின் சமூக பின் தங்கிய நிலையை நிரூபிக்கும் விதமான தரவுகள் இல்லை என இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்து. இது ஒரு தொடக்கம்தான். தமிழக அரசு உடனடியாக புள்ளி விவரங்களை சேகரித்து இதை தமிழக சட்டமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட வேண்டும்.

 

கோர்ட் உத்தரவை விரைவாக அனுப்ப புதிய மென்பொருள் அறிமுகம்

சுருக்கம்: 

  • நீதிமன்ற உத்தரவுகளை, சம்பந்தப்பட்டவர்களுக்கு வேகமாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பி வைக்க, ஒரு பிரத்யேக மென்பொருளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
  • நம் நாட்டில், நீதிமன்றம் ஜாமின் வழங்கியும், குற்றவாளிகளால் உடனடியாக சிறையில் இருந்து வெளி வர முடியாத நிலை உள்ளது. நீதிமன்ற உத்தரவை விரைந்து பெற முடிய வில்லை, உத்தரவு ஆவணத்தை சரிபார்க்க முடியவில்லை என்பது போன்ற காரணங்களால், இந்த நடைமுறை தாமதமாகிறது.இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • நீதிமன்ற உத்தரவுகள் சம்பந்தப்பட்ட வர்களுக்கு வேகமாக சென்றடைய, 'பாஸ்டர்' எனப்படும் மென்பொருளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.'
  • வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த அறிமுக விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட், ஹேமந்த் குப்தா மற்றும் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் பங்கேற்றனர்.
  • உச்ச நீதிமன்றம் மற்றும் இதர உயர் நீதிமன்றங்களில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை, மூன்றாம் தரப்பினரின் குறுக்கீடு இல்லாமல் பாதுகாப்பாகவும், வேகமாகவும் அனுப்பி வைக்க, பாஸ்டர் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதற்காக, உயர் நீதிமன்றங்கள் மற்றும் சிறைகளில், 73 அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
  •  பிரத்யேக மின்னஞ்சல் முகவரி களும் துவக்கப்பட்டுஉள்ளன. இனி, இதன் வாயிலாக அனைத்துஉத்தரவுகளும் வேகமாக அனுப்பி வைக்கப்படும்.

 

தொல்லியல் பொருட்கள் கண்டெடுப்பு

சுருக்கம்: 

  • தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் நாகரிகம் 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ளது என்பதை உலகம் அறியச் செய்யும் வகையில் தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு மற்றும் சங்ககால கொற்கை துறைமுகத்தின் அடையாளம் காண முன்களபுல ஆய்வு செய்யப்படும் என கடந்த சட்டசபைகூட்டத் தொடரில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • நெல்லை மாவட்டம் துலுக்கர் பட்டி கிராமத்திலிருந்து கண்ணநல்லூர் கிராமம் செல்லும் சாலையில் நம்பியற்று படுகையில் வாழ்வியல்மேடு காணப்படுகிறது. இப்பகுதியை விளாங்காடு என்று அழைக்கப்படுகிறது.
  • அகழாய்வு செய்யும் பணியினை தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
  • அகழாய்வு பணிக்காக ரூ.15 கோடிநிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • செவ்வண்ணம், கருப்பு-சிவப்பு வண்ணம், கருப்பு வண்ணம், வெண்புள்ளி, இட்ட கருப்பு சிவப்பு வண்ண மட்கல், பானைஓடுகளும் குறியீடுகள் கொண்ட மட்கலபானை ஓடுகளும், ஈமத்தாழிகளும் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • பல்வேறு வண்ணங்களில் அணிகலன்களும் 36 அரிய வகை தொல்லியல் பொருட்கள்வரையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக சேகரிக்கப்பட்டுவருகிறது
  • . டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் ஆய்வுக்குஅனுப்பப்பட உள்ளதாக இதன் இயக்குநர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
  • இரும்புக்கால புதைவிடப்பகுதியின் வாழ்விடப் பகுதியாக கருதப்படுவதால் இன்னும்பல அரிய வகை தொல்லியல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து இப்பணி ஏப்ரல் மாத இறுதி வரை நடைபெறுகிறது . 

 

ஆசியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட் விருதுகள்

சுருக்கம்: 

  • ஆசியாவின் மிக மதிப்புமிக்க பிராண்ட் விருதுகள்" விருது வழங்கும் விழா தி மிரா ஹாங்காங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.
  • பல உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தங்கள் தொழில்களில் சிறந்த செயல்திறன் அல்லது புதுமையான சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டன. வெற்றி பெற்ற நிறுவனங்கள் தொழில்ரீதியாகவும் பாரபட்சமின்றியும் சுயாதீன விருதுகள் குழுவால் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டன.
  • மற்ற வேட்பாளர்களிடமிருந்து தனித்து நிற்பது, இந்த வெற்றியாளர்கள் அதிக போட்டித்தன்மை கொண்டவர்கள் என்பதை நிரூபித்துள்ளது, இதனால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • ஹாங்காங்கின் சிறந்த புவியியல் இருப்பிடம் பல்வேறு தொழில்களில் உள்ள நிறுவனங்களை தனித்து நிற்கவும், வெற்றியில் வளரவும் அனுமதிக்கிறது.
  •  1997 இல் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்ததன் மூலம், உள்ளூர் நிறுவனங்கள் சீன அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட தேசிய வளர்ச்சி மூலோபாயத்திற்கு இணங்க, மெயின்லேண்ட் நோக்கி தங்கள் சந்தையை விரிவுபடுத்தி வருகின்றன. 
  • சேவை மட்டத்தில் போட்டித்தன்மையைப் பேணுவதற்கு கூடுதலாக, சமீபத்திய ஆண்டுகளில் அதிகமான நிறுவனங்கள் தங்கள் சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றி, நகரங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை அளித்து வருகின்றன.
  • சீனா லைஃப் இன்சூரன்ஸ் (ஓவர்சீஸ்) கம்பெனி லிமிடெட், நியூ வேர்ல்ட் டெவலப்மென்ட் கம்பெனி லிமிடெட், கமானியா டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் (எச்கே) கோ லிமிடெட், ஐ-அக்சஸ் போன்ற பலதரப்பட்ட தொழில்களில் இருந்து வெற்றி பெற்ற நிறுவனங்கள் வந்துள்ளனபல்வேறு புகழ்பெற்ற பிரபலங்கள் விருதுகளை வழங்க அழைக்கப்பட்டனர்.
  •  தற்போதைய வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான துணைச் செயலாளர் டாக்டர் பெர்னார்ட் சான் பாக்-லி மற்றும் சிறந்த இளைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.மிக்கி யான் வை கியு ஆகியோர் அடங்குவர். அதே நேரத்தில் VQ அறக்கட்டளை லிமிடெட் நிறுவனர் மற்றும் தலைவர்.v
  • எங்களின் கெளரவ விருந்தினர்கள் உள்ளூர் மற்றும் பெருநிலப்பரப்பில் வணிகத்தை நிர்வகிப்பதில் தங்களின் நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர். 
  • கருத்துக்கள் மற்றும் உத்வேகங்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம், இரு தரப்பினரும் எதிர்காலத்தில் ஒத்துழைக்க எதிர்பார்த்தனர்.

 

தேசிய சிலம்பு போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை

சுருக்கம்: 

  • பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தாடிக்கொம்பை சேர்ந்த மாணவ மாணவிகள் 24 பதக்கங்களை பெற்று சாதனை.
  • பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தாடிக்கொம்பு லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தாடிக்கொம்பு லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
  • எட்டு தங்கப் பதக்கம், ஏழு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒன்பது வெண்கலப் பதக்கம் என மொத்தம் 24 பதக்கங்கள் பெற்றனர்.
  •  வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் சந்திரசேகரன் முதல்வர் ரமேஷ் துணை முதல்வர் வித்யா மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் பாராட்டினர்.
  • 9 வயது பிரிவில் நெடுங்கம்பு, தொடுகம்பு பிரிவில் வி.ஹரிபாலன் தங்கப் பதக்கமும், 11 வயது பிரிவில் சுருள்வாள், நெடுங்கம்பு பிரிவில் எம். இளவளவன் தங்கபதக்கமும், 14 வயது பெண்கள் பிரிவில் வாள்வீச்சு நெடுங்கம்பு பிரிவில் வி.நிதர்சினி தங்கப் பதக்கமும் பெற்றிருக்கின்றனர். அதே 
  • எடைபிரிவில் 35 நபர்களுக்கு மேல் இருந்ததால் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
  • 20 வயது பெண்கள் பிரிவில் சுருள்வாள், நெடுங்கம்பு பிரிவில் பி.தீக்ஷிதா தங்கப் பதக்கமும், 16 வயது பிரிவில் சுருள்வாள், நெடுங்கம்பு பிரிவில் எம்.பரணிராஜ் தங்கப் பதக்கமும், 17வயது பிரிவில் வேல்கம்பு, நெடுங்கம்பு பிரிவில் சூரியா தங்கப் பதக்கமும் பெற்றிருக்கின்றனர். இவை தவிர, வெண்கலப் பதக்கம் பெற்றவர்களும் அதிகம் பேர் உள்ளனர்.

 

ஜூனியர் மகளிர் உலக கோப்பை ஹாக்கி இந்திய அணி அறிவிப்பு

சுருக்கம்: 

  • தென் ஆப்ரிக்காவில் நடைபெற உள்ள ஜூனியர் மகளிர் ஹாக்கி உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜூனியர் மகளிர் ஹாக்கி உலக கோப்பை (யு21) தொடர், தென் ஆப்ரிக்காவில் டிச.5ம் தேதி தொடங்கி டிச.16 வரை நடைபெற உள்ளது.
  • இந்தியா, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, இங்கிலாந்து, தென் கொரியா, நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா, உருகுவே, ஜெர்மனி, ஸ்பெயின், அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து, ஜிம்பாப்வே உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் தலா 4 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி... அர்ஜென்டினா, ஜப்பான், ரஷ்யா அணிகளின் சவாலை எதிர்கொள்கிறது.  உலக கோப்பையில் விளையாட உள்ள இந்திய அணியை, ஹாக்கி இந்தியா நேற்று அறிவித்தது.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய சீனியர் மகளிர் அணியில் விளையாடிய ஒலிம்பியன் லால்ரேம்சியாமி கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
  •  இஷிகா சவுத்ரி துணைக் கேப்டனாகவும், குஷ்பு, பிச்சு தேவி கரிபம் ஆகியோர் கோல் கீப்பர்களாக இடம் பெற்றுள்ளனர்.
  • கேப்டன் லால்ரேம்சியாமி மட்டுமின்றி சாலிமா தேடே, ஷர்மிளா தேவி ஆகியோரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள்.
  • பிச்சு தேவி கரிபம் (கோல் கீப்பர்), குஷ்பூ (கோல் கீப்பர்), அக்‌ஷதா அபசோ டேக்லே, இஷிகா சவுத்ரி (துணை கேப்டன்), பிரியங்கா, மரினா லால்ரமங்ஹகி, அஜ்மினா குஜூர், பல்ஜித் கவுர், ரீத், வைஷ்ணவி விட்டல் பால்கே, சாலிமா தேடே, ஷர்மிளா தேவி, லால்ரேம்சியாமி(கேப்டன்),  பியூட்டி  டங்டங், தீபிகா, மும்தாஜ் கான், சங்கீதா குமாரி, ஜிவான் கிஷோரி டப்பூ.

 

 

 

 

 

 

வளையாட்ட

 

 

 

SI/POLICE ACHIEVERS Achievers

  • RAMESH

    SI / POLICE SI / POLICE

Gokhale Street, Opp Senthil Kumaran Theatre, Ram Nagar, Coimbatore, Tamil Nadu - 641009

Courses

Contact

Connect With Us
Subscribe Us