Current Affairs

TNPSC DAILY CA APRIL 8 - Tamil

என்.எல்.சி.இந்தியா நிறுவனம் - மின் உற்பத்தியில் புதிய சாதனை

சுருக்கம்

  • என்.எல்.சி., இந்தியா நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில் 232 கோடியே 94 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
  • கடலுார் மாவட்டம் நெய்வேலியில் நேற்று நடந்த என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் நடப்பு நிதியாண்டின் (2021--22), முதல் காலாண்டிற்கான செயல்பாடுகள் வெளியிடப்பட்டது.  
  • அந்நிறுவனம் தனது துணை நிறுவனத்தையும் சேர்த்து கடந்த ஜூன் 30 ம் தேதியுடன் முடிந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ரூ 3221 கோடியே 79 லட்சத்தை மொத்த வருவாயாக ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.நிகர லாபத்தைப் பொறுத்தவரையில், இந்நிறுவனம் தனது துணை நிறுவனத்தையும் சேர்த்து, ரூ. 357 கோடியே 59 லட்சத்தை ஈட்டியுள்ளது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தால் மட்டும், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில்  ஈட்டப் பட்டுள்ள மொத்த வருவாய் ரூ. 2504 கோடியே 45 லட்சமாகும்.
  • நிகர லாபத்தைப் பொறுத்த வரையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் மட்டும் ரூ. 267 கோடியே 22 லட்சத்தை ஈட்டியுள்ளது.முதல் காலாண்டில் 10 லட்சத்து 17 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரியை விற்பனை செய்துள்ளது.
  • மின் உற்பத்தியை பொறுத்தவரை இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 663 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் யூனிட் மின் சக்தியையும், துணை நிறுவனத்துடன் இணைந்து 796 கோடியே 55 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் மின் சக்தியையும் உற்பத்தி செய்துள்ளது.
  • புதுப்பிக்கவல்ல மின்சக்தியைப் பொறுத்தவரையில், இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 57 கோடியே 25 லட்சத்து 30 ஆயிரம் யூனிட் பசுமை மின் சக்தியை உற்பத்தி செய்துள்ளது.
  • கடந்த ஜூன் மாதத்தில் 232 கோடியே 94 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்து சாதனை படைத்தது. குறிப்பாக கடந்த ஜூன் 30ம் தேதி மட்டும், 9 கோடியே 16 லட்சத்து 20 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்து நிறுவன வரலாற்றில் ஒரு மாதத்திலும், ஒரு நாளிலும் அதிகபட்ச மின் உற்பத்தியை பதிவு செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.
  • கடந்த நிதியாண்டின் இதே கால அளவை ஒப்பிடுகையில் 60.60 சதவீத வளர்ச்சியாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் என்.எல்.சி மின்நிலையங்களில் 1,374 கோடியே 27 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
  • நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட முதல் மின் உற்பத்தி பிரிவில் சில மாதங்களும், 709 மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின் நிலையங்களில் 9 மாதங்களும் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுஇதன்மூலம் 6,110 கோடியே 99 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் வருவாயும், நிகர லாபமாக 386 கோடியே 99 லட்சம் ரூபாயும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் ஈட்டியுள்ளது.

 

தூய்மையான உணவு வளாகம் -ஐ சி எப் 5 நட்சத்திர சான்றிதழ்

சுருக்கம்

  • சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலைக்கு (ஐ.சி.எஃப்) இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் 'தூய்மையான உணவு வளாகத்துக்கான' 5 நட்சத்திர தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய அரசின் உடல்நலம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட் டுப்பாட்டு நிறுவனம் (ஊநநஅஐ) செயல்படுகிறது

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • பொதுமக்கள் உடல்நல பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  • தூய்மையான உணவு வளாகம் என்னும் திட்டத்தின் கீழ், இந்த நிறுவனம் சார்பில், பல்வேறு பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
  • அவ்வாறு சான்றிதழ் வழங்கும் முன்பு உணவு வீணாவதைத் தவிர்த்தல், அவ்வாறு மீதமாகும் உணவை உயிரியல் முறைகளில் மக் கச் செய்தல், உணவு மற்றும் வடிகட்டிய குடிநீரின் தர ஆய்வு, உண வகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட கால அவகா சத்தில் உடல்நல சோதனை, உணவக ஊழியர்கள் சரியான விதத்தில் உடை அணிந்திருத்தல், தரம் கெடாமலிருக்க பாதுகாப்பாக வைக் கப்பட்ட உணவுப் பொருள்களின் உபயோகம் உள்பட பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே அந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.
  • அந்த வகையில், ஐசிஎஃப் நிர்வாகத்துக்கு ஐந்து நட்சத்திர தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
  • தூய்மையான உணவு வளாகம் திட்டத்தின் கீழ், ஐசிஎஃப் ஊழியர்களுக்கு நிறுவியுள்ள நான்கு உணவகங்களும் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
  • இதற்கான சான்றிதழை ஐசிஎஃப் பொதுமேலாளர் ஏ.கே.அகர் வாலிடம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் தெற்கு பிராந்திய இயக்குநர் முத்துமாறன்  வழங்கினார்.  
  • ஐசிஎஃப் தலைமை நிர்வாக அதிகாரி பி.உ தய்குமார் ரெட்டி மற்றும் ஐசிஎஃப் அதிகாரிகள் ஆகியோர், இந்தி கழ்வுக்கு முன்னிலை வகித்தனர். இந்திய ரயில்வேயின் உற்பத்தித் தொழிற்சாலைகளில் இத்தகு சான்றிதழ் பெற்றுள்ள முதல் நிறுவ னம் ஐசிஎஃப் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்காவில் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக பதவியேற்பு

சுருக்கம்

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் முதன்முறையாக கறுப்பின பெண் ஒருவர் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
  • கறுப்பின பெண்ணான கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்பவரை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்தார்.
  • ஜோ பைடன்  ஒப்புதலுக்கு பின் அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தி அதன்பின் தான் அவர் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
  • 100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க செனட், ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே 50-50 என சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜாக்சனை நீதிபதியாக நியமிக்க தொடக்கத்திலிருந்தே ஜனநாயகக் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
  • அதனைத்தொடர்ந்து பைடன் தனது தேர்தல் வாக்குறுதியின் போது கறுப்பின ஆப்ரிக்க அமெரிக்கரை நீதிபதியாக நியமிக்கலாம் என்று கூறியதை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.
  •  94 சதவீதம் வெள்ளை அமெரிக்கர்களுக்கு மத்தியில், 6 சதவீதம் மட்டுமே இருக்கும் கறுப்பின ஆப்ரிக்கரை நீதிபதியாக நியமிப்பதா என்று அவர்கள் விமர்சித்தனர்.
  • நடந்து முடிந்த செனட் வாக்கெடுப்பில் 53 - 47 என்ற வித்தியாசத்தில் வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் 53 வாக்குகள் பெற்றதையடுத்து ஜாக்சன், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக நியமிக்கப்படபோவது உறுதியாகியுள்ளது.

உள்ளன.

 

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு

சுருக்கம்

  • மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
  • மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக முந்தைய அதிமுக அரசு கடந்த 2020-ம் ஆண்டு 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தைக் கொண்டு வந்தது.  
  • நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் எளிதாக இடம் கிடைத்து வருகிறது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • தமிழக அரசின் இந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்களும், இந்த இடஒதுக்கீட்டை தங்களுக்கும் வழங்கக் கோரி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
  • இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.
  • வழக்கு விசாரணையின்போது, ‘‘தமிழகத்தில் ஏற்கெனவே 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. எஞ்சிய 31 சதவீதத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிவிட்டால், பொதுப்பிரிவில் உள்ளமாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மனுதாரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனரே’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
  • தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர், ‘‘மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்
  • 7.5 சதவீத இடஒதுக்கீடு, 31 சதவீதத்தில் இருந்து வழங்கப்படவில்லை. மொத்த இடங்களில் இருந்துதான் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் நீட் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது  
  • உயர் கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், ‘‘பின்தங்கிய நிலையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருப்பது நியாயமானதுதான். இதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை’
  • அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், ‘‘இந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்’

 

உலகின் சிறந்த மருத்துவமனை

சுருக்கம்

  • உலகின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
  • உலகளாவிய தர ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டாடிஸ்டா நிறுவனம், நியூஸ் வீக் இதழ் இணைந்து 2021-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த மருத்துவமனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இந்த பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளின் மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன.
  • மருத்துவமனைகளின் நிலையான சிறப்பு செயல்பாடு, சிறந்த மருத்துவர்கள், செவிலியர் பணிவிடை, அதிநவீன தொழில் நுட்பம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • உலகின் சிறந்த மருத்துவமனைகளாக இந்தியாவில் இருந்து 11 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், சிறந்த குழந்தைகள் மருத்துவமனையாக சென்னையில் செயல்பட்டு வரும் காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம்

சுருக்கம்

  • உக்ரைன் மீது இராணுவ தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது 
  • இந்த தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு அளித்ததால் ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்க்ப்பட்டது. தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் 47 உறுப்பினர்களை கொண்டது.  இதன் உறுப்பினர்கள் ஐ.நா. சபையின் 193 உறுப்பு நாடுகளால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள்.
  • கவுன்சிலில் ரஷ்யாவும் உறுப்பு நாடாக இருக்கிறது. உக்ரைனில் உள்ள புச்சா பகுதியில் நடைபெற்ற  தாக்குதலில் பல்வேறு பொதுமக்கள் தாக்குதலுக்கு ஆளானதாக புகார் எழுந்த நிலையில், மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என  அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் அழைப்பு விடுத்திருந்தார்.
  • வாக்கெடுப்பு நடைபெற்றது. ரஷ்யாவை  மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்கம்  செய்யும் தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்தது. இந்தநிலையில், 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. மேலும் 58 நாடுகள் வாக்களிக்கவில்லை.
  • 3-ல் 2 பங்கு வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக பதிவானது என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரஷ்யா  மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
  • ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல் புறக்கணித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
  • மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியா தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
  • ரஷியாவை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்தநிலையில், 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. 58 நாடுகள் வாக்களிக்கவில்லை.  முன்னதாக ரஷியாவை இடைநிறுத்துவதற்கான வரைவு தீர்மானத்தின் மீது வாக்களிப்பதை இந்தியா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

TET ACHIEVERS Achievers

  • RAJARAJESHWARI

    TNTET TNTET

Gokhale Street, Opp Senthil Kumaran Theatre, Ram Nagar, Coimbatore, Tamil Nadu - 641009

Courses

Contact

Connect With Us
Subscribe Us