Current Affairs

TNPSC DAILY CA 04 - Tamil

 

இந்தோ-பசிபிக் பிராந்தியத்துடன் இந்தியாவுக்கு நூற்றாண்டுத் தொடர்பு

சுருக்கம்

  • இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரத்தில் ஒத்துழைப்பின் அடிப்படையிலான அணுகுமுறையை இந்தியா கடைப்பிடித்து வருவதாகத் தெரிவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
  • துா்க்மெனிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ள குடியரசுத் தலைவர். ராம்நாத் கோவிந்த், தலைநகர். ஆஷ்காபாடில் உள்ள சர்வதேச நல்லுறவு மையத்தில் உரையாற்றினார்.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் கிடைக்க வேண்டும் என்ற ‘சாகா்’ கொள்கையையே இந்தியா கொண்டுள்ளது.
  • அக்கொள்கையின் அடிப்படையிலேயே இந்தியக் கடல் பகுதியிலும், இந்தோ-பசிபிக் பிராந்தியப் பகுதிகளிலும் இந்தியாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.  
  • ஒத்துழைப்பு அடிப்படையில் அமைந்த அணுகுமுறையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது. ‘இந்தோ-பசிபிக்’ என்பது அண்மைக் காலமாகத்தான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • ஆனால், அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடனான இந்தியாவின் தொடர்பு பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது.
  •  பிராந்தியம் அனைவருக்கும் பொதுவானதாகத் திகழ்ந்து, விதிகளின் அடிப்படையில் சர்வதேச வர்த்தகம் நடைபெற வேண்டும் என்பதற்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது.
  • ‘அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியத் தூணாக மாறியுள்ளது. நாடுகளுடனான தொடர்பு, வர்த்தகம்-முதலீடுகளை அதிகரிப்பது, பாதுகாப்பான, நிலையான அண்டை நாடுகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றில் அக்கொள்கை கவனம் செலுத்துகிறது. 
  • மத்திய ஆசிய நாடுகளும் இந்தியாவும் வளர்ச்சி சார்ந்து ஒரேவித அணுகுமுறையைக் கொண்டிருக்கின்றன. பயங்கரவாதம், தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பொதுவான சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். 
  • போக்குவரத்துத் தொடர்பு  மத்திய ஆசிய நாடுகளுடன் போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
  • ஈரானில் உள்ள சாபஹா் துறைமுகத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.

 

 

ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயம்

சுருக்கம்:

  • ஆந்திரப் பிரதேசம் இன்று 13 புதிய மாவட்டங்களை உருவாக்கி மொத்த எண்ணிக்கையை 26 ஆக உயர்த்தியது.
  • முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி குண்டூர் மாவட்டத்தில் உள்ள தாடேபள்ளியில் உள்ள தனது அலுவலக முகாமில் இருந்து மாநிலத்தில் 13 புதிய மாவட்டங்களை டிஜிட்டல் முறையில் தொடங்கி வைத்தார்.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • 2019 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு மக்களவைத் தொகுதியையும் ஒரு மாவட்டமாக மாற்றும் என்று வாக்குறுதி அளித்தார்.
  • மாநிலத்தில் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கிழக்கு கோதாவரி மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள பழங்குடியினப் பகுதிகளை செதுக்கி கூடுதலாக ஒரு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
  • 51 ஆக இருந்த வருவாய் கோட்டங்கள் 73 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியானது.
  • இந்த நிலையில், குண்டூர் மாவட்டம் தாடேபள்ளியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புதிதாக உருவாக்கப்பட்ட 13 மாவட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
  • புதிய மாவட்டங்களின் இணையதளங்கள் மற்றும் கையேடுகளை வெளியிட்டார். சித்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சித்தூரை தலைமையிடமாகக் கொண்டு சித்தூர் மாவட்டமும், திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு பாலாஜி மாவட்டமும் இன்று முதல் செயல்பட உள்ளது.
  • இதனிடையே  புதிதாக உருவான மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் இன்று முதல் தங்களது பணிகளை தொடங்க உள்ளனர்.

 

தேசிய யோகா சாம்பியன்ஷிப் தமிழக பெண்கள் சாதனை

சுருக்கம்

  • குஜராத்தில் நடந்த தேசிய சீனியர் யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.
  • குஜராத் மாநிலம், ஆமதாபாத் பகுதியில், நேஷனல் யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவிலான 2வது சீனியர் யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள், மார்ச் 29ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை நடந்தது.இதில், தமிழகம், டில்லி உட்பட, 19 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம், 169 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • தமிழகம் சார்பில் பங்கேற்ற பெண்கள் அணியினர், 2 தங்கம், 5 வெள்ளிப் பதக்கங்கள், 2 கோப்பைகளையும் பெற்று, தேசிய அளவில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
  •  வைஷ்ணவி இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளியும், நிவேதா, காயத்திரி, ரோகிணி, தீபிகா ஆகியோர், தலா ஒரு வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றினர்.
  • அனைத்து போட்டிகள் முடிவில், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் இரண்டாம் இடத்தையும், புதுச்சேரி, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.
  • போட்டிகளில் வெற்றி பெற்று சென்னை திரும்பிய தமிழக வீராங்கனையர், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • சிறுமி தேஜாஸ்ரீ உலக சாதனை செய்யும் வகையில் தலை கவிழ்ந்து படுத்தபடி, ஒரு நிமிடத்தில், 38 முறை தனது இரு கால்களை தலைக்கு முன் கொண்டு வரும், கண்டபேருண்டாசனம் என்கிற கடினமான யோகாவை செய்து உலக சாதனை படைத்தார்.
  • இவரது சாதனை, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’, ஆவ்சம் உலக சாதனை’ புத்தகங்களில் இடம் பிடித்தன.உலக சாதனை படைத்த சிறுமி தேஜாஸ்ரீ மற்றும் அவருக்கு பயிற்சி அளித்த யோகா பயிற்றுனர்
  • சந்தியா ஆகியோரை, பள்ளி நிர்வாகமும், கும்மிடிப்பூண்டி பகுதி மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

 

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 500 கிலோ வெடிகுண்டு விமானப்படையிடம் ஒப்படைப்பு

சுருக்கம்

  • ஓ.எப்.கே. தொழிற்சாலை தயாரித்துள்ள 500 கிலோ எடை கொண்ட இந்த வெடிகுண்டு இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனை மேம்படுத்தும். முதல் கட்ட மாக 48 வெடிகுண்டுகள் விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
  • இந்த வெடிகுண்டு தயாரிப்பு பணியில் பாதுகாப்பு துறையை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் நிபுணர்கள் ஈடுபட்டனர்.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் ராணுவ வெடிபொருட்கள் தயாரிக்கும் ஓ.எப்.கே. தொழிற்சாலை (கமாரியா ஆயுத தொழிற்சாலை) கடந்த 1943-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இந்த தொழிற்சாலை 2-ம் உலகப்போரின் போது வெடிபொருட்களை தயாரித்து வழங்கியது.சீனாவுடன் 1962-ம் ஆண்டு நடந்த போரின்போதும் பாகிஸ்தானுடன் 1965, 1971-ம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களின் போதும் பல்வேறு வெடிபொருட்ளை அந்த தொழிற்சாலை தயாரித்து வழங்கியது.
  • துணை ராணுவப்படைகளுக்கான ஆயுதங்கள், வெடிபொருட்களையும் ஓ.எப்.கே. தொழிற்சாலை தயாரித்து வருகிறது.இந்த நிலையில் ஓ.எப்.கே. தொழிற்சாலை 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டை தயாரித்துள்ளது.
  • முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய வெடிகுண்டு இதுவாகும். அந்த வெடிகுண்டு இந்திய விமானப்படையின் பயன்பாட்டுக்காக நேற்று வழங்கப்பட்டது.
  • OFK வலைத்தளத்தின்படி, 1943 இல் நிறுவப்பட்ட இந்தத் தொழிற்சாலை, வெடிமருந்து உற்பத்தியின் முக்கிய அலகுகளில் ஒன்றாகும். இது இரண்டாம் உலகப் போரின் போது பொருட்களை வழங்கியுள்ளது .
  • சுதந்திரத்திற்குப் பிறகு, 1962 சீனப் போர் மற்றும் 1965 மற்றும் 1971 இல் பாகிஸ்தான் போர்களின் போது ஆயுதப்படைகளுக்கு பல்வேறு வகையான வெடிமருந்துகளை வழங்குவதில் தொழிற்சாலை முக்கிய பங்கு வகித்தது .
  • இந்த தொழிற்சாலை துணை ராணுவப் படைகளுக்கும் வெடிமருந்துகளை வழங்குகிறது. இந்த தொழிற்சாலை துணை ராணுவப் படைகளுக்கும் வெடிமருந்துகளை வழங்குகிறது.
  • தற்போது, ​​வன்பொருள் உதிரிபாகங்கள் உற்பத்தி, வெடிமருந்து நிரப்புதல் மற்றும் வெடிமருந்துகளை அசெம்பிள் செய்தல் ஆகியவற்றின் சமீபத்திய கலவை மூலம் உற்பத்தி செயல்பாடு செய்யப்படுகிறது.
  • வெடிமருந்து கூறு மற்றும் பொறியியல் பிரிவு, சிறிய ஆயுத வெடிமருந்து பிரிவு மற்றும் வெடிமருந்து நிரப்புதல் பிரிவு என பல்வேறு வகையான வெடிமருந்துகளின் உற்பத்தியை செயல்படுத்த தொழிற்சாலை மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.

 

உலக மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

சுருக்கம்

  • ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
  • நியூஸிலாந்தில் ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிறைஸ்ட்சா்ச்சில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தோ்வு செய்தது. ஆனால் அந்த அணிக்கு மோசமான அனுபவமாக இந்த ஆட்டம் அமைந்தது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி, ரேச்சல் ஹெய்ன்ஸ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது.
  • பெண்கள் உலக கோப்பையில் (50 ஓவர்) ஆதிக்கம் செலுத்தி வரும் ஆஸ்திரேலிய அணி 7வது முறையாக (1978, 1982, 1988, 1997, 2005, 2013, 2022) சாம்பியன் பட்டம் வென்றது.
  • இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இரு இடத்தில் இங்கிலாந்து (1973, 1993, 2009, 2017), நியூசிலாந்து (2000) அணிகள் உள்ளன.பைனலில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையுடன் ரூ. 10 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.
  • பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த இங்கிலாந்துக்கு ரூ. 4.55 கோடி வழங்கப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

SI/POLICE ACHIEVERS Achievers

  • ESWARAN

    SI / POLICE SI / POLICE

Gokhale Street, Opp Senthil Kumaran Theatre, Ram Nagar, Coimbatore, Tamil Nadu - 641009

Courses

Contact

Connect With Us
Subscribe Us