Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 05-December-2019 to 05-December-2019
  • 1. இந்தியாவில் ஹெல்த்கேர் புதுமை மையம் அமைக்க இந்தியா, எந்த நாட்டுடன் கைகோர்த்துள்ளன?
    • A) ஸ்வீடன்
    • B) இத்தாலி
    • C) ஸ்விட்சர்லாந்த்
    • D) நெதர்லாந்து
    Show Answer Hide Answer
    Answer A

  • 2. சர்வதேச தன்னார்வ தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
    • A) டிசம்பர் 5
    • B) டிசம்பர் 4
    • C) டிசம்பர் 3
    • D) டிசம்பர் 2
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
     பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான சர்வதேச தன்னார்வ தினம் (டிசம்பர் 5), பொதுவாக சர்வதேச தன்னார்வ தினம் (ஐவிடி) என்று அழைக்கப்படுகிறது. இது 1985 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபையால் கட்டளையிடப்பட்ட ஒரு சர்வதேச அனுசரிப்பு ஆகும். இது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தன்னார்வலர்களை ஊக்குவிக்க தன்னார்வலர்கள், தன்னார்வ முயற்சிகளை ஆதரிக்க அரசாங்கங்களை ஊக்குவித்தல் மற்றும் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை (எஸ்.டி.ஜி) அடைவதற்கு தன்னார்வ பங்களிப்புகளை அங்கீகரிக்கவும் உதவுகிறது.  கருப்பொருள்: “தன்னார்வலர்களை உள்ளடக்கிய எதிர்காலம்”

  • 3. உலக மண் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
    • A) டிசம்பர் 3
    • B) டிசம்பர் 4
    • C) டிசம்பர் 8
    • D) டிசம்பர் 5
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
     ஐ.நா. (FAO) மாநாட்டின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, ஜூன் 2013 இல், உலக மண் தினத்திற்கு ஒப்புதல் அளித்தது, மேலும் 68 வது ஐ.நா. டிசம்பர் 2013 இல், ஐ.நா பொதுச் சபையின் 68 வது அமர்வு டிசம்பர் 5 ஐ உலக மண் தினமாக அறிவித்தது.  கருப்பொருள்: ‘மண் அரிப்பை நிறுத்துங்கள், எங்கள் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள்’ என்ற கருப்பொருளின் கீழ் 2019 உலக மண் தினம் நடைபெறும்.

  • 4. உலக மண் தினம் கொண்டாட ஐநா எந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது?
    • A) ஜூன் 2013
    • B) ஜூன் 2014
    • C) ஜூன் 2015
    • D) ஜூன் 2016
    Show Answer Hide Answer
    Answer A

  • 5. டிசோய் என்ற சக்தி வாய்ந்த புயல் எந்த நாட்டை தாக்கியுள்ளது?
    • A) பிலிப்பைன்ஸ்
    • B) தாய்லாந்து
    • C) ஜப்பான்
    • D) சீனா
    Show Answer Hide Answer
    Answer A

  • 6. ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாக திகழ்வது?
    • A) அண்ணா நூற்றாண்டு நூலகம்
    • B) தஞ்சை நூலகம்
    • C) கன்னிமாரா நூலகம்
    • D) இவை அனைத்தும்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
     கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட் செலால் துவக்கப்பட்டது. இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன,  அவையாவும் மதராசு மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை மதராசு அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன.  பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்ட நாள்: 5-12-1896.  கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிஸ் இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது.  இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராசு மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை மதராசு அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன.  பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.  அன்றைய மதராசு மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார்.  1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. திறக்கப்பட்டபோது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.  இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நூலகத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்கு பெறப்படும்.  இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது.

  • 7. உலகிலேயே இளம் வயதில் காப்புரிமை பெற்று தேசிய விருதை வென்ற ஹிருதயேஸ்வர் சிங் பாட்டி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
    • A) ராஜஸ்தான்
    • B) மகாராஷ்டிரா
    • C) மத்தியபிரதேசம்
    • D) உத்திரபிரதேசம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
     உலகிலேயே இளம் வயதில் காப்புரிமை(patent)பெற்ற மாற்றுத்திறனாளி சிறுவர் நேற்று குடியரசு துணைத் தலைவரிடம் தேசிய விருது பெற்றுள்ளார்.  ஜெய்ப்பூரைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஹிருதயேஸ்வர் சிங் பாட்டி. தசைநார் தேய்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர், அசாத்திய திறமையுடன் இதுவரை 7 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.  அவற்றில் மூன்றுக்கு அவரின் பெயரில் காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.அவருக்கு சமூக நலத்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில், 'தலைசிறந்த படைப்பாற்றல் சிறுவன் 2019' என்ற விருதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

  • 8. இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை எந்த ஆண்டு கூகிள் நிறுவகணத்தின் சிஇஓ-வாக நியமனம் செய்யப்பட்டார்?
    • A) 2015
    • B) 2013
    • C) 2011
    • D) 2009
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
     அமெரிக்காவைச்சேர்ந்த பிரபல இணையதள தேடுபொறி நிறுவனம் கூகுள். உலக அளவில் அதிக பயனாளர்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக, இந்தியாவைச்சேர்ந்த சுந்தர் பிச்சை கடந்த 2015 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.  இந்த நிலையில், கூகுளின் தாய் நிறுவனம் என்று சொல்லப்படும் ஆல்பாபெட் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்த லாரிபேஜ் மற்றும் செர்ஜி பிரைன் ஆகிய இருவரும் விலகியுள்ளனர்.  21 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் பொறுப்பாக சுந்தர் பிச்சைக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 9. ஆசியாவிலேயே முதல் முறையாக எங்கு குழந்தைகள் நல மருத்துவமனையில் இயற்கை மருத்துவ சிகிச்சை அறிமுகம்?
    • A) கோவை
    • B) மதுரை
    • C) திருச்சி
    • D) சென்னை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
     ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னை எழும் பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில், குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.  உலகளவில் அபாயகரமான நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், மரபு வழியில் பின் தொடரும் ஒரு சில நோய்களுக்கு இன்றும் முற்றுபுள்ளி வைக்க முடியவில்லை.  அவ்வாறான நோய்களை முழுமையாக தடுக்கவும், கட்டுப்படுத்தவும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது.  குழந்தைகளுக்கென பிரத்யோகமாக யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை ஆசியாவிலேயே முதன் முறையாக எழும்பூர் அரசு குழந்தைகள் நலஆஸ்பத்திரியில் தான் செயல்படுத்தப்பட்டுள்ளது.

  • 10. டிசோய் என்ற சக்தி வாய்ந்த புயல் எந்த நாட்டை தாக்கியுள்ளது?
    • A) கொரியா
    • B) ஜப்பான்
    • C) சீனா
    • D) பிலிப்பைன்ஸ்
    Show Answer Hide Answer
    Answer D