Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 08-October-2019 to 08-October-2019
  • 1. பஞ்ச பாண்டவர்கள் படுக்கை எனப்படும் சமணர் படுக்கை எங்கு உள்ளது?
    • A) திருச்சி
    • B) சேலம்
    • C) கரூர்
    • D) நாமக்கல்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
     நாமக்கல் மாவட்டம், மோகனுார் அருகே, சென்னால்கல் புதுாரில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.  அதன் கீழ்புறம், 2,000 ஆண்டுகளுக்கு முன், தமிழ் சமணர்கள் உறங்குவதற்காக பாறைகளை அடுக்கடுக்காக செதுக்கி, கற்படுக்கை அமைத்துஉள்ளனர்.  பாறையில் செதுக்கப்பட்டுள்ள படுக்கை, சமண முனிவர்கள், இங்கு நீண்ட காலம் தங்கி தவமிருந்து வாழ்ந்தனர் என்பதை உணர்த்துகிறது.  இதை பஞ்ச பாண்டவர்கள் படுக்கை என்றும் கூறுகின்றனர்.

  • 2. தரைவழி போக்குவரத்துக்கு வித்திட்ட பெண் யார்?
    • A) ராணி மங்கம்மாள்
    • B) முத்துவீரப்பன்
    • C) வேலுநாச்சியார்
    • D) ஜான்சிராணி
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
     இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகமாக தரைவழிப் போக்குவரத்து (ரோடுகள்) பயன்பாட்டில் உள்ளது.  தேசிய, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட, கிராமசாலைகள் என 17,154 கி.மீ.,க்கு ரோடுகள் உள்ளன.  1689 முதல் 1704 வரை திருச்சியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த ராணி மங்கம்மாள் அதில் மிக முக்கியமானவர்.  கிராமங்களில் இருந்து நகரத்திற்கு மக்கள் சுலபமாக வாணிப நோக்கில் வந்து செல்ல பல கி.மீ., துாரத்திற்கு ரோடு அமைத்தார். அவர் ஆரம்பித்த மதுரை -- கன்னியாகுமரி நெடுஞ்சாலை வரலாற்றுச் சான்றாக உள்ளது.\

  • 3. பல் மருத்துவ சேவைக்கான இணையதளம், செயலியை தொடங்கிவைத்தவர் யார்?
    • A) நிர்மலா சீதாராமன்
    • B) சந்தோஷ் குமார்
    • C) ஹர்ஷ்வர்தன்
    • D) பிரகாஷ் ஜாவ்ட்க்கார்
    Show Answer Hide Answer
    Answer C

  • 4. தேசிய வாய்வழி சுகாதார திட்டத்தின் கீழ் ஒரு முயற்சியாக தொடங்கப்பட்ட திட்டம்?
    • A) இ-தாந்த் சேவா
    • B) இ-சாந்த் சேவா
    • C) இ-காந்த் சேவா
    • D) இ-பாந் சேவா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
     அக்டோபர் 7, 2019 அன்று, ஈடான்ட் சேவாவை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.  இது தேசிய வாய்வழி சுகாதார திட்டத்தின் கீழ் ஒரு முயற்சி. இந்த முயற்சி வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • 5. கீழ்க்கண்டவற்றுள் எது இந்திய வரலாற்றில் முதல் மற்றும் மிகப்பெரிய பிரச்சாரம் ஆகும்?
    • A) காவேரி அமந்திரன்
    • B) கங்கா அமந்திரன்
    • C) யமுனா அமந்திரன்
    • D) சரஸ்வதி அமந்திரன்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
     கங்கை நதியின் பங்குதாரர்களை இணைப்பதற்கான ஒரு முயற்சி கங்கா அமந்திரன் ஜல் சக்தி அமைச்சரால் தொடங்கப்பட்டது.  இது தூய்மையான கங்கைக்கான தேசிய மிஷனின் முதல் முயற்சி. இது ஒரு திறந்த - நீர் ராஃப்டிங் மற்றும் கயாக்கிங் பயணம் ஆகும்.  இது கங்கையில் 2019 அக்டோபர் 10 முதல் நவம்பர் 11 வரை நடைபெற உள்ளது.  இந்த பயணம் தேவ்பிரயாகில் தொடங்கி கங்கையில் 2,500 கி.மீ தூரத்தில் கங்கா சாகரில் முடிகிறது. இது இந்திய வரலாற்றில் முதல் மற்றும் மிகப்பெரிய பிரச்சாரமாகும், இது நதி புத்துணர்ச்சி மற்றும் நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பெரிய அளவில் உருவாக்குகிறது

  • 6. மனித உடல் செல்கள் குறித்த ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
    • A) வில்லியம் ஜி.கேலின்
    • B) சர் பீட்டர் ரேட் கிளிப்
    • C) கிரேக் எல்.செம்ன்ஸா
    • D) இவர்கள் மூவரும் பெற்றனர்.
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
     1901-ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969 ஆம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசும் சேர்க்கப்பட்டது.  இந்நிலையில் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், 2019-ம் ஆண்டிற்கானமருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  மனித உடல் செல்கள் குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில் வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர் ரேட் கிளிப், கிரேக் எல்.செம்ன்ஸா ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 7. ‘ரபேல்’ விமானத்தில் பார்வை எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளையும் தாக்கக்கூடிய வல்லமை கொண்ட ஏவுகணை எது?
    • A) மீட்டேர் ஏவுகணை
    • B) ஸ்கால்ப் ஏவுகணை
    • C) அக்னி 1
    • D) பிரமோஸ் 2
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
     மீட்டேர் ஏவுகணை, விமானத்தில் இருந்து பாய்ந்து சென்று வானத்தில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கவல்ல அடுத்த தலைமுறை ஏவுகணை ஆகும். பார்வை எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளையும் தாக்கக்கூடியது.  எல்லா வானிலையையும் சமாளித்து செயல்படும். அதிநவீன ரேடார் வழிகாட்டலுடன் இயங்கும். ஜெட் விமானங்கள் முதல் சிறிய ஆளில்லா விமானங்கள் மற்றும் குரூஸ் ரக ஏவுகணைகள் வரை தாக்கவல்லது.  இதுபோல், ‘ஸ்கால்ப்’ ஏவுகணை, ஆழ்ந்து தாக்கக்கூடிய ஏவுகணை ஆகும். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கு இவற்றை பயன்படுத்தலாம். இங்கிலாந்து ராயல் விமானப்படை, பிரான்ஸ் விமானப்படை ஆகியவற்றில் இந்த ஏவுகணை உள்ளது. வளைகுடா போரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • 8. சர்வதேச பலுான் திருவிழா எங்கு நடைபெருகிறது?
    • A) இந்தியா
    • B) சீனா
    • C) ஜப்பான்
    • D) அமெரிக்கா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
     அமெரிக்காவின், 'அல்பக்கர்க்' நகரில் சர்வதேச பலுான் திருவிழா நடந்து வருகிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பலுான் திருவிழாவில், 100க்கணக்கான பலுான்கள் பறக்க விடப்பட்டன.

  • 9. உலக பருத்தி தினம் முதல் முறையாக என்று அனுசரிக்கப்படுகிறது?
    • A) அக்டோபர் 4
    • B) அக்டோபர் 5
    • C) அக்டோபர் 6
    • D) அக்டோபர் 7
    Show Answer Hide Answer
    Answer D

  • 10. 87-வது இந்திய விமானப்படை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
    • A) அக்டோபர் 7
    • B) அக்டோபர் 8
    • C) அக்டோபர் 9
    • D) அக்டோபர்10
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
     நாட்டில் இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனை அடுத்து புதுடெல்லியில் உள்ள காஜியாபாத் அருகே ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8-ந்தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.  இந்த ஆண்டு 87-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.