Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 03-October-2019 to 03-October-2019
 • 1. மகாத்மா காந்தியை கவுரவிக்கும் வகையில் எந்த நாட்டில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலை வெளியிடப்பட்டது?
  • A) பிரான்ஸ்
  • B) துருக்கி
  • C) பாலஸ்தீனம்
  • D) இவை அனைத்தும் சரி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
   மகாத்மா காந்தி பிறந்த நாள் அக்டோபர் 2 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.  மகாத்மா காந்தியை கவுரவிக்கும் வகையில், பிரான்சில் அவரது உருவப்படம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையை பிரான்ஸ் தபால் துறை வெளியிட்டுள்ளது.  உஸ்பெகிஸ்தான், துருக்கி, பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளும் மகாத்மா காந்திக்கு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளன.

 • 2. சுகாதாரத்தின் தரம் பற்றிய ஆய்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாநிலம்?
  • A) தமிழ்நாடு
  • B) கேரளா
  • C) ஆந்திரா
  • D) குஜராத்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
   குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில் பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து, தமிழக அரசின் சார்பில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார்.

 • 3. தூய்மையான ரெயில் நிலையம் என்ற தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாநிலம்?
  • A) தமிழ்நாடு
  • B) ஆந்திரா
  • C) ராஜஸ்தான்
  • D) டெல்லி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  ஆய்வின்படி ரெயில் நிலையங்களின் தூய்மை தரவரிசைப் பட்டியலை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் வெளியிட்டார்.  இந்த பட்டியலில் முதல் 3 இடங்களை ராஜஸ்தான் மாநிலம் பிடித்து உள்ளது. அங்குள்ள ஜெய்ப்பூர், ஜோத்பூர், துர்காபுரா ரெயில் நிலையங்கள் முதல் 3 இடங்களை பிடித்து உள்ளன

 • 4. 'மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் எங்கு தயாரிக்கப்பட்டன?
  • A) தமிழ்நாடு
  • B) மத்தியபிரதேசம்
  • C) உத்திரபிரதேசம்
  • D) பஞ்சாப்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
   டெல்லி-வாரணாசி இடையே முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  டெல்லி-கத்ரா நகருக்கு இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்துள்ளார்.  புதுடெல்லியில் இருந்து ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ரா நோக்கி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தனது முதல் வர்த்தக சேவையை வரும் 5ம் தேதி தொடங்குகிறது

 • 5. தூய்மை இந்தியா திட்டம் எந்த வருடம் தொடங்கப்பட்டது?
  • A) 2012
  • B) 2013
  • C) 2014
  • D) 2015
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
   மகாத்மா காந்தியின் சுத்தமான இந்தியா எனும் கனவை நிறைவேற்றும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார்.  பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு தொடங்கிய தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1.96 லட்சம் மதிப்பீட்டில் 11 கோடி கழிவறைகள் நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ளன

 • 6. 'மோ சர்க்கார்' என்ற திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
  • A) ஆந்திரா
  • B) கர்நாடகா
  • C) மேற்கு வங்கம்
  • D) ஒடிசா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
   ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னியாக் 'மோ சர்க்கார்' அல்லது 'எனது அரசு' திட்டத்தை தொடங்கினார்.  மோ சர்க்கார் என்பது அரசாங்க அலுவலகங்களில் ஒரு மாற்றத்தைக் குறிப்பிடுவதற்கான 5 டி மாதிரியின் கீழ் ஒரு முன்முயற்சி" என்று பட்நாயக் மேலும் கூறினார்.

 • 7. நான்காவது தொழில்துறை புரட்சியை துரிதப்படுத்தும் நோக்கில் உச்சிமாநாடு எங்கு நடைபெறவுள்ளது?
  • A) டெல்லி
  • B) மும்பை
  • C) குஜராத்
  • D) பஞ்சாப்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  கருப்பொருள் :புதுமையான இந்தியா: தெற்காசியாவை வலுப்படுத்துதல், உலகத்தை பாதித்தல்.  உலக பொருளாதார மன்றம்: இது ஒரு சர்வதேச அமைப்பு 1971 இல் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவின் கொலோனியில் நிறுவப்பட்டது.

 • 8. இந்திய ஜனாதிபதி "ஸ்வச்ச்தா தூதர்" விருதை யாருக்கு வழங்கினார்?
  • A) கங்குலி
  • B) தோனி
  • C) சுனில் கவாஸ்கர்
  • D) சச்சின் டெண்டுல்கர்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
   "ஐக்கிய நாடுகள் சபை 2030 க்குள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை நிர்ணயித்திருந்தாலும், இந்தியா அதை 11 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவு செய்யும். இந்த சாதனையைப் பொறுத்தவரை, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பாராட்டுக்கு தகுதியானவர்" என்று இந்திய ஜனாதிபதி கூறினார்.  இளம் வயதில் இந்தியாவின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா " விருதை 2014ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 • 9. இந்திய ஜனாதிபதி ஸ்வச்ச்தா தூதர் விருதை யாருக்கு வழங்கினார்?
  • A) கங்குலி
  • B) தோனி
  • C) விராட் கோலி
  • D) சச்சின் டெண்டுல்கர்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
   இளம் வயதில் இந்தியாவின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா " விருதை 2014ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 • 10. அமராபாத் புலி ரிசர்வ் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
  • A) தெலுங்கானா
  • B) ஆந்திரா
  • C) கர்நாடகா
  • D) குஜராத்
  Show Answer Hide Answer
  Answer A