Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 28-September-2019 to 28-September-2019
 • 1. KAZIND-2019 எங்கு நடைபெற உள்ளது?
  • A) பஞ்சாப்
  • B) முசோரி
  • C) உத்திரகாண்ட்
  • D) ஹிமாச்சல பிரதேசம்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  இந்தியாவுக்கும் கஜகஸ்தானுக்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சி 2019 (KAZIND-2019 ) அக்டோபர் 3 – 15 வரை உத்தரகண்ட் பித்தோராகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முக்கியமாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துகிறது.

 • 2. முதல் முறையாக சுற்றுலாப் பயணிகளுக்கான விசாக்களை வழங்க எந்த நாடு முடிவு செய்துள்ளது?
  • A) ஈராக்
  • B) பெக்ரைன்
  • C) ஓமான்
  • D) செளதி அரேபியா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  2030-ம் ஆண்டுக்குள் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவர சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் திட்டமிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை முதல் முறையாக சவுதி அரேபியா வழங்குகிறது. “சவுதி அரேபியாவை சர்வதேச சுற்றுலாவுக்காக நாங்கள் அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளோம். இங்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வியப்படைவார்கள். இங்கு யுனெஸ்கோவின் 5 முக்கிய இடங்கள் இருக்கின்றன.

 • 3. சமீபத்தில் கூகுள் நிறுவனம் எத்தனையாவது பிறந்த நாளை கொண்டாடுகிறது?
  • A) 21
  • B) 22
  • C) 23
  • D) 24
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
   செப்டம்பர் 27 அன்று, 1998-ம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டைச் சேர்ந்த பி.ஹெச்.டி. மாணவர்களான செர்ஜே பிரின் மற்றும் லாரன்ஸ் பேஜ் ஆகியோர், மிகப்பெரிய தேடுதளமான கூகுளை உருவாக்கினர்.  ஒன்று என்ற எண்ணுக்குப் பிறகு 100 பூஜ்ஜியங்களை இட்டால் கிடைக்கக் கூடிய பெரிய எண்ணைக் குறிக்கும் 'கூகல்' என்ற வார்த்தையிலிருந்து அவர்கள் தங்களது தேடுதளத்திற்கு கூகுள் என பெயரிட்டனர்.  'தீமைகள் செய்ய வேண்டாம்' என்பதைக் குறிக்கும் 'டோண்ட் பீ ஈவில்' என்பதையே கூகுள் நிறுவனம் தங்களது இலக்காகக் கொண்டுள்ளது.

 • 4. முதல் உள்நாட்டு உயர் வெப்பநிலை எரிபொருள் செல் அமைப்பு யாரால் தொடங்கப்பட்டது?
  • A) ராம்நாத் கோவிந்த்
  • B) நரேந்திர மோடி
  • C) நிர்மலா சீதாராமன்
  • D) கிரண் ரிஜுஜு
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
   இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘புதிய மில்லினியம் இந்திய தொழில்நுட்ப தலைமைத்துவ முயற்சி (NMITLI- New Millennium Indian Technology Leadership Initiative)’ இன் கீழ் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) உருவாக்கிய முதல் உள்நாட்டு உயர் வெப்பநிலை எரிபொருள் செல் அமைப்பை அறிமுகப்படுத்தினார்.  78 வது அறக்கட்டளை தின சி.எஸ்.ஐ.ஆரை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள விஜியன் பவனில் தொடங்கப்பட்டது.

 • 5. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு?
  • A) 2014
  • B) 2015
  • C) 2016
  • D) 2017
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
   நகர்ப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்கும் நோக்கில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ஜூன் 2015 இல் தொடங்கப்பட்டது  PMAY இன் கீழ், நகர்ப்புற ஏழைகளுக்காக 2 கோடி வீடுகளை 2022 ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகள் மற்றும் குறைந்த வருமானக் குழுக்கள் உட்பட 2 கோடி வீடுகளை மத்திய அரசிடமிருந்து 2 டிரில்லியன் டாலர் (29 பில்லியன் அமெரிக்க டாலர்) நிதி உதவி மூலம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.  பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (நகர்ப்புற) கீழ் மேலும் 1.23 லட்சம் வீடுகள் கட்ட அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 • 6. குருநானக் நினைவாக நாணயங்கள் வெளியிட்ட நாடு எது?
  • A) இந்தியா
  • B) நேபாளம்
  • C) ஜப்பான்
  • D) தென் கொரியா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
   நேபாளத்தின் சென்ட்ரல் பேங்க் குருநானக் தேவ்வின் நினைவாக 3 காயின்களை வெளியிட்டுள்ளது.  குருநானக் தேவ் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை தொடர்ந்து 550வது ஆண்டு குருநானக் தேவ் நினைவாக நேபாளத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஒன்று 3 காயின்களை அறிமுகம் செய்துள்ளது.  காத்மண்டுவில் உள்ள அலாப்ட் ஓட்டலில் இந்நிகழ்ச்சி நடந்தது. நேபாள ரூபாய் மதிப்பில் 100,100 மற்றும் 2500 போன்ற மதிப்பிலான இந்த நாணயங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் நேபால் ராஷ்டிர பேங்கின் கவர்னர் சிரஞ்சீவி நேபாள் மற்றும் இந்திய தூதர் மஞ்சீவ் சிங் புரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 • 7. 54-வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழா எங்கு நடைபெற உள்ளது?
  • A) கோவை
  • B) மதுரை
  • C) சென்னை
  • D) திருச்சி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
   இராமலிங்கர் பணி மன்றம், ஏவிஎம் அறக்கட்டளையுடன் இணைந்து, 54-வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழாவை மயிலாப்பூர் ஏவிஎம் இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி, 5-ம் தேதி வரை நடத்துகிறது.  ‘வள்ளலார் மறைந்தது எப்படி?’ என்ற நூலை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 • 8. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை சேர்ந்த தீபக் புனியா பிடித்த இடம்?
  • A) முதலாம்
  • B) இரண்டாம்
  • C) மூன்றாம்
  • D) நான்காம்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
   உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தி யாவின் தீபக் புனியா 86 கிலோ எடைப் பிரிவு தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். அதே வேளையில் 65 கிலோ எடைப் பிரிவில் முதலிடத்தை பஜ்ரங் புனியா இழந்துள்ளார்.  சர்வதேச மல்யுத்த சம்மேளனம் தரவரிசை பட்டியலை வெளி யிட்டுள்ளது. இதில் ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவில் இந்தியா வின் தீபக் புனியா 82 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தீபக் புனியா வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி இருந்தார்.

 • 9. உலக ரேபிஸ் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
  • A) செப்டம்பர் 26
  • B) செப்டம்பர் 27
  • C) செப்டம்பர் 28
  • D) செப்டம்பர் 29
  Show Answer Hide Answer
  Answer C

 • 10. பசுமை நுகர்வோர் நாள் அனுசரிக்கப்படும் நாள் எது?
  • A) செப்டம்பர் 26
  • B) செப்டம்பர் 27
  • C) செப்டம்பர் 28
  • D) செப்டம்பர் 29
  Show Answer Hide Answer
  Answer C