Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 27-September-2019 to 27-September-2019
 • 1. காஷ்மீர் தயாரிப்புகளான எந்த உற்பத்திக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது?
  • A) குங்கமப்பூ
  • B) காஸ்மீர் பட்டு
  • C) வாதுமைப் பருப்புகள்
  • D) வால்நட்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  நறுமணம் கொண்ட குங்குமப்பூ, உணவுக்கு சுவையூட்டவும், வண்ணம் சேர்க்கவும் உதவும். இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் இவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

 • 2. இந்தியாவில் உள்ள முதல் 25 பணக்காரர்களின் நிறுவனங்கள் செய்யும் உற்பத்தி இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் எதனை சதவீதம்?
  • A) 7
  • B) 8
  • C) 9
  • D) 10
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
   இந்தியாவில் உள்ள முதல் 25 பணக்காரர்களின் நிறுவனங்கள் செய்யும் உற்பத்தி இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாகும்.  இந்திய கோடீசுவரர்களில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்துஜா குடும்பத்தினர் 2 வது இடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 3 வது இடத்தில் அசீம் பிரேம்ஜி உள்ளார்.  இந்திய கோடீசுவரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 8-வது ஆண்டாக முதல் இடத்தை பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது

 • 3. ஒரு குழந்தையின் இரண்டாவது தாயைக் குறிக்கும் வகையில் டிக்கி மௌஸி எந்த அரணசங்கதல்ல தொடங்கப்பட்டது?
  • A) ஆந்திரா
  • B) கர்நாடகா
  • C) தெலுங்கானா
  • D) ஒடிசா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
   ஒரு குழந்தையின் இரண்டாவது தாயைக் குறிக்கும் வகையில் இந்த சின்னம் பெயரிடப்பட்டுள்ளது  குழந்தைகள் மற்றும் பெண்களின் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை பரப்பும் நோக்கில், ஒடிசா அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மற்றும் மிஷன் சக்தி, ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகளின் அவசர நிதியம் (யுனிசெஃப்) உடன் இணைந்து டிக்கி மௌஸி என்ற சின்னத்தை வெளியிட்டது.  எந்தவொரு நலத்திட்டத்திற்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மையமாக உள்ளனர் என்பதை மாநில அரசாங்க முன்முயற்சி எடுத்துக்காட்டுகிறது. முக்கிய சிறப்பம்சங்கள் யுனிசெஃப் உடன் இணைந்து திணைக்களம் குழந்தை மற்றும் பெண்ணின் ஊட்டச்சத்து மற்றும் அவற்றின் வளர்ச்சி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு விரிவான மாநில அளவிலான தகவல் தொடர்பு மூலோபாயத்தையும் அறிமுகப்படுத்திய து.

 • 4. கடைசி மற்றும் 18 வது சார்க் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
  • A) சீனா
  • B) ஜப்பான்
  • C) நேபாளம்
  • D) பூடான்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
   கடைசி மற்றும் 18 வது சார்க் உச்சி மாநாடு காத்மாண்டில் நடைபெற்றது. பாகிஸ்தான் அடுத்த சார்க் உச்சி மாநாட்டை நடத்த இருந்தது. இருப்பினும், 19 பேரைக் கொன்ற யூரி தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா அதிலிருந்து விலகியது. பயங்கரவாத தாக்குதலை சமாளிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் எதிர்கால சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.  சார்க் அமைச்சர்கள் கூட்டம் 2019 செப்டம்பர் 26 அன்று நியூயார்க்கில் நடைபெற்றது.

 • 5. சாந்தி ஸ்வரூப் பட்நகர் பரிசு எந்த துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது?
  • A) தமிழ்
  • B) ஆங்கிலம்
  • C) கணிதம்
  • D) அறிவியல்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
   இந்தியாவில் ஆண்டுதோறும் அறிவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கும் இளம் அறிவியலாளர்களுக்கு "அறிவியல் தொழில் ஆய்வுக் கவுன்சில்" (CSIR) இனால் வழங்கப்படும் விருதாகும்.  புதுடில்லியில் உள்ள விஜியன் பவனில் நடைபெற்ற விழாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பான பங்களிப்புகளுக்காக இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சாந்தி ஸ்வரூப் பட்நகர் பரிசுகளை வழங்கினார். உயிரியல் அறிவியல்  டாக்டர் கயாரத் சாய் கிருஷ்ணன் - இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புனே  டாக்டர் சௌமன் பாசக் - தேசிய நோய்த்தடுப்பு நிறுவனம், புது தில்லி 2. வேதியியல் அறிவியல்  டாக்டர் தபஸ் குமார் மாஜி -ஜவஹர்லால் நேரு மையம் மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி, பெங்களூரு.  டாக்டர் ராகவன் பி சுனோஜ் -ஐ.ஐ.டி, பம்பாய் 3. மருத்துவ அறிவியல்  டாக்டர் தீரஜ் குமார் - மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம், புது தில்லி  டாக்டர் முகமது ஜாவேத் அலி - எல்.வி.பிரசாத் கண் நிறுவனம், ஹைதராபாத் 4. இயற்பியல்  டாக்டர் அனிந்தா சின்ஹா - ஐ.ஐ.எஸ்.சி, பெங்களூரு,  டாக்டர் சங்கர் கோஷ் - டி.ஐ.எஃப்.ஆர், மும்பை

 • 6. ஜி.கிஷன் ரெட்டியால் அவசர அழைப்புக்கு ஒரே எண் சேவை எங்கு தொடங்கிவைக்கப்பட்டு உள்ளது?
  • A) ஜலந்தர்
  • B) ஒடிசா
  • C) புனே
  • D) டெல்லி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
   டெல்லியில் ஒரே அவசர அழைப்பு எண் 112 -ஐ உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார்.  இந்த புதிய அமைப்பின் மூலம் அவசர அழைப்பு அழைக்கும் போது நேரடியாக போலீஸ் கட்டு ப்பாட்டு அறைக்கு செல்கிறது. டெல்லி மக்கள் அனைவரும் ஒரே எண்ணை டயல் செய்வதன் மூலம் போலீஸ், தீயணைப்பு சேவை மற்றும் ஆம்புலன்ஸ் என 3 அவசர சேவைகளை பெற முடியும்

 • 7. உலக சுற்றுலா தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
  • A) செப்டம்பர் 26
  • B) செப்டம்பர் 27
  • C) செப்டம்பர் 28
  • D) செப்டம்பர் 29
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
   ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சர்வதேச சமூகங்களிடையே சமூக, அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார விழுமியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  UNWTO - ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு 1980 முதல் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடி வருகிறது.  கருப்பொருள்: “சுற்றுலா மற்றும் வேலைகள் - அனைவருக்கும் சிறந்த எதிர்காலம்”

 • 8. உலக ரேபிஸ் தினம் அனுசரிக்கப்படும் நாள்?
  • A) செப்டம்பர் 26
  • B) செப்டம்பர் 27
  • C) செப்டம்பர் 28
  • D) செப்டம்பர் 29
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
   உலக ரேபிஸ் தினம் என்பது ரேபிஸ் தடுப்புக்கான முதல் மற்றும் ஒரே உலகளாவிய நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு நாளாகும். இது ஒரு சமூகமாக ஒன்றிணைவதற்கும் தனிநபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் தங்கள் பணிகளை இணைத்து பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாகும்.

 • 9. மாற்று நோபல் விருதை பெரும் கிரேட்டா தன்பெர்க் எந்த நாட்டை சேர்ந்ந்தவர்?
  • A) கனடா
  • B) அமெரிக்கா
  • C) இங்கிலாந்து
  • D) ஸ்வீடன்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
   அமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 23) ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் என்ற 16 வயது சிறுமி (பருவநிலை மாற்ற ஆர்வலர்) பங்கேற்றார்.  இந்நிலையில், கிரேட்டா தன்பெர்க் ‘வாழ்வாதார உரிமை விருது'-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகள் விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.  உலக அளவில் 'வாழ்வாதார உரிமை விருது' நோபல் பரிசுக்கு நிகராக கருதப்படுவதால் இது ‘மாற்று நோபல் விருது' என்றும் அழைக்கப்படுகிறது.  கிரேட்டா தன்பெர்க் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘வெள்ளிக்கிழமைகள் எதிர்காலத்திற்கானது’ என்ற இயக்கத்தின் பெயரில் “பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பள்ளிகள் வேலைநிறுத்தம் செய்கின்றன” என்ற முழக்கத்துடன் ஸ்விடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்.