Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 20-September-2019 to 20-September-2019
  • 1. போஷன் அபியான் திட்டம் பிரதமர் மோடியால் எப்போது தொடங்கப்பட்டது?
    • A) 2019
    • B) 2018
    • C) 2017
    • D) 2016
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    உலகின் மிகப்பெரிய ஊட்டச்சத்து திட்டமான போஷன் அபியான், 10 கோடி மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் 2018 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் குண்டாக இருக்கும் குழந்தைகள் எடையை குறைப்பது, எடை குறைந்த குழந்தைகள் பிறப்பை குறைப்பது நோக்கமாகக் கொண்டுள்ளது. குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெண்கள் மத்தியில் 2022 வரை தலா 3 சதவீதம் இரத்த சோகை ஏற்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் இதனை குறைக்க சிறப்பு இலக்கு 25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • 2. இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
    • A) பி எஸ் தனோவா
    • B) கிருஷ்ண சவ்மிநாதன்
    • C) கிருஷ்ண குமார்
    • D) பதாரியா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • 3. உலக தரம் வாய்ந்த தேசிய காவல் துறை பல்கலைக்கழகம் எங்கு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது?
    • A) மத்தியபிரதேசம்
    • B) ஹிமாச்சலப்பிரதேசம்
    • C) உத்திரப்பிரதேசம்
    • D) அருணாச்சலப்பிரதேசம்
    Show Answer Hide Answer
    Answer C

  • 4. தேசிய பேரிடர் மீட்பு படை உருவாக்கப்பட்ட ஆண்டு?
    • A) 2006
    • B) 2007
    • C) 2008
    • D) 2009
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    தேசிய பேரிடர் மீட்பு படையின் தற்போதைய தலைவர்- எஸ். என். பிரதான் 2020 ம் ஆண்டுக்குள் தேசிய பேரிடர் மீட்ப்பு படையில் பெண்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று என் டி ஆர் எப் இயக்குனர் அறிவித்துள்ளார்.

  • 5. தேஜாஸ் இலகு ரக போர் விமானத்தில் முதன் முதலாக பயணித்தவர் யார்?
    • A) அமிக் ஷா
    • B) நிர்மலா சீதாராமன்
    • C) தமிழ்மணி
    • D) ராஜ்நாத் சிங்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பன்னோக்கு இலகு ரக போர் விமானமான தேஜஸ் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு அமைச்சர் என்ற சிறப்பை திரு.ராஜ்நாத்சிங் பெற்றுள்ளார். பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவன விமான தளத்திலிருந்து புறப்பட்ட ராஜ்நாத்சிங், தேஜஸ் போர் விமானத்தில் சுமார் 30 நிமிடங்கள் பயணம் செய்தார். அவருடன் விமானப்படை துணை தளபதி ஏர்வைஸ் மார்ஷல் நம்தேஸ்வர் திவாரியும் அந்த விமானத்தில் பயணம் செய்தார். பின்னர் தமது பயண அனுபவங்களை விளக்கிய பாதுகாப்பு அமைச்சர், இந்தப் பயணம், பரபரப்பு மற்றும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது என்றார். தேஜஸ் போர் விமானத்தை வடிவமைத்து தயாரித்ததற்காக, இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் & விமான மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். போர் விமானங்களை உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யும் நிலையில் இந்தியா உள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். நமது வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படைகளை நினைத்து மிகுந்த பெருமிதம் அடைவதாகக் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படை, ராணுவம் & கடற்படையினர், வீரம் மற்றும் துணிச்சலுடன் தங்களது பணியை சிறப்பாக நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

  • 6. எந்த நாட்டு முன்னாள் பிரதமர், பார் தி ரெகார்ட் என்ற நூலை வெளியிட்டார்?
    • A) பிரேசில்
    • B) பிரிட்டன்
    • C) பெகிரைன்
    • D) பெல்ஜியம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    நூலின் ஆசிரியர்- டேவிட் கேமரூன்

  • 7. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள உலக நாடுகளின் தர வரிசையில் இந்தியாவின் இடம்?
    • A) 106
    • B) 105
    • C) 104
    • D) 103
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    இந்த வரிசையில் முதலிடம் வகிக்கும் நாடு- பெல்ஜியம் பிரான்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

  • 8. உலகின் மிகப்பெரிய பரபரப்பான விமான நிலையம் எந்த நாட்டில் உள்ளது?
    • A) கனடா
    • B) அமெரிக்கா
    • C) ஆஸ்திரேலியா
    • D) இங்கிலாந்து
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    கார்ட்ஸ் பீல்ட் ஜாக்சன் விமான நிலையம் அமெரிக்காவில் அட்லாண்டாவில் உள்ளது

  • 9. இந்திய தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டு உள்ள முதல் செவித்திறன் குறைபாடு உள்ள தனுஷ் ஸ்ரீகாந்த் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
    • A) தமிழ்நாடு
    • B) கேரளா
    • C) ஆந்திரா
    • D) தெலுங்கானா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்று தேசிய பதக்கம் வென்ற முதல் துப்பாக்கி சுடும் வீரர் ஆவர்.

  • 10. அன்னி பெசண்ட் நினைவு நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
    • A) செப்டம்பர் 17
    • B) செப்டம்பர் 18
    • C) செப்டம்பர் 19
    • D) செப்டம்பர் 20
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    ஒரு சாதாரண ஐரியக் குடும்பத்தில் லண்டனில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தவர் அன்னி வூட். தந்தை வில்லியம் பைஜ்வூட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர். "நியூமால் தூசியன் அமைப்பு" என்ற சீர்திருத்தச் சங்கத்துக்குத் தலைவியானார் அன்னி பெசண்ட். நாடாளுமன்ற அங்கத்தினர்கள் கடவுளின் பெயரால் சத்தியம் செய்யத் தேவையில்லை என்று வற்புறுத்தி கூட்டங்களில் பேசினார். "லிங்க்" என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி, இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.