Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 19-September-2019 to 19-September-2019
 • 1. தூய்மையான நிலக்கரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்க்கான தேசிய மையம் எங்கு திறக்கப்பட்டது?
  • A) குண்டூர்
  • B) நெய்வேலி
  • C) பெங்களூரு
  • D) கண்ணூர்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் திறந்து வைத்தார்.

 • 2. தமிழகத்தை சேந்த நான்கு பேர் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு உச்சநீதிமன்றத்தின் தற்போதய எண்ணிக்கை?
  • A) 31
  • B) 32
  • C) 33
  • D) 34
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி -கிருஷ்ணா முராரி இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி- வி.ராமசுப்பிரமணியன் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி- ரவீந்திர பத் கேரளா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி- ஹிருஷிகேஷ் ராய்

 • 3. ‘பொது கட்டிடக்கலைகளில் வளர்ந்து வரும் போக்குகள்’ குறித்த தேசிய கருத்தரங்கு எங்கு நடைபெற்றது?
  • A) பூனே
  • B) குஜராத்
  • C) பாண்டிச்சேரி
  • D) டெல்லி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  நடைபெற்ற ‘கட்டுமான தொழில்நுட்ப ஆண்டின்’ போது தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மத்திய பொதுப்பணித் துறையால் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கட்டுமானத் துறையில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில், பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2020 வரை ‘கட்டுமான தொழில்நுட்ப ஆண்டாக’ எடுத்துக் கொள்ளப்படுவதாக அறிவித்திருந்தார் .

 • 4. உலகிலேயே அதிகம் புலம் பெயர்ந்தோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என ஐ நா அறிவித்துள்ளது ?
  • A) இலங்கை
  • B) இந்தியா
  • C) இங்கிலாந்து
  • D) இத்தாலி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள புதிய மதிப்பீடுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் உலகளவில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 27.2 கோடியை எட்டியுள்ளது. இதில் 1.75 கோடி புலம் பெயர்ந்தோர்கள் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது. சர்வதேச புலம்பெயர்ந்தோர் 2019, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையின் (தேசா) மக்கள்தொகை பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பகுதிகளுக்கும் வயது, பாலினம் மற்றும் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை வெளியிட்டு உள்ளது.

 • 5. அமெரிக்கா முதன் முதலாக பூமிக்கடியில் அணுகுண்டு சோதனை எந்த வருடம் மேற்கொண்டது?
  • A) 1956
  • B) 1957
  • C) 1958
  • D) 1959
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  அமெரிக்கா முதல் முறையாக பூமிக்கடியி்ல் அணுகுண்டு சோதனையை நடத்தியது செப்டம்பர் 19 , 1957

 • 6. உலகின் மிகப்பெரிய நீர் மற்றும் நிலத்தில் வாழும் இனங்களுக்கு என்ன பெயரிடப்பட்டு உள்ளது?
  • A) ராஜா ஆம்பத்
  • B) சுரினம் தேரை
  • C) வயோமிங் டோட்
  • D) ஆண்ட்ரியாஸ் ஸ்லிகோய்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  லண்டன் விலங்கியல் சொசைட்டி (ZSL) மற்றும் லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் அருங்காட்சியக மாதிரிகளிலிருந்து டி.என்.ஏவைப் பயன்படுத்தி ஒரு புதிய வகை மாபெரும் சாலமண்டரை அடையாளம் கண்டுள்ளனர். 74 வயதான அருங்காட்சியக மாதிரி உலகின் மிகப்பெரிய நீர் மற்றும் நிலத்தில் வாழும் புதிய இனமாக இருக்கலாம் எனக் கணித்து உள்ளனர்.

 • 7. 63 ம் ஆண்டு அணுசக்தி முகமை பொது மாநாடு எங்கு நடைபெறுகிறது?
  • A) வியன்னா
  • B) துபாய்
  • C) பெர்லின்
  • D) இஸ்லாமாபாத்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  சர்வதேச அணுசக்தி முகமை (ஐ.ஏ.இ.ஏ) பொது மாநாட்டின் 63 வது ஆண்டு வழக்கமான அமர்வு 2019 செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 20 வரை ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெறுகிறது. மாநாட்டிற்கான இந்திய தூதுக்குழுவிற்கு அணுசக்தி ஆணையத்தின் (ஏ.இ.சி) தலைவரும், அணுசக்தி துறை செயலாளருமான டாக்டர் கே என் வியாஸ் தலைமை தாங்கினார். மாநாட்டில் மற்ற உயர் அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.இ.ஏ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

 • 8. சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தின ஆண்டு?
  • A) 1983
  • B) 1893
  • C) 1863
  • D) 1963
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  1863-ம் ஆண்டு, ஜனவரி 12-ல் பிறந்தார். அவரின் இயற்பெயர் 'நரேந்திரநாத் தத்தா'. விவேகானந்தரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது, 1893-ம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் அவர் ஆற்றிய உரைதான். இந்தியாவில் இருந்து இந்து மதப் பிரதிநிதியாக சிகாகோ மாநாட்டில் விவேகானந்தர் கலந்துகொண்டார். "சகோதர, சகோதரிகளே" என்று அவர் தன் உரையை ஆரம்பித்தார்.