Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 06-September-2019 to 06-September-2019
 • 1. தியாக தீபம் என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படுபவர் யார்?
  • A) தீலிபன்
  • B) சங்கர்
  • C) ராமநாராயணன்
  • D) ராதாமோகன்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  1987 ஆம் ஆண்டு 5 அம்ச கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இலங்கையின் யாழ்ப்பாணம் நல்லூரில் சொட்டு நீர் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் நீத்தவர் திலீபன். திலீபனின் 31-வது நினைவேந்தல் உலகம் முழுவதும் தமிழர்களால் இன்று கடைபிடிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

 • 2. எந்த நாட்டில் இந்து மதத்தை சார்ந்த புஷ்பா கோல்கி போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார் ?
  • A) கஜகஸ்தான்
  • B) பாகிஸ்தான்
  • C) உஸ்பெகிஸ்தான்
  • D) தாய்லாந்து
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  பாகிஸ்தானில் இந்தப் பொறுப்பை ஏற்கும் இந்து மதத்தைச் சேர்ந்த முதல் பெண்மணி புஷ்பா கோல்கி என்பது குறிப்பிடத்தக்கது.

 • 3. உலகில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முதலிடம் பிடித்த நகரம் ?
  • A) சாரா புரி
  • B) காஞ்சனபுரி
  • C) பாங்காக்
  • D) ரட்சா புரி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக், தொடர்ச்சியாக 4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்து உள்ளது தெரியவந்து இருக்கிறது. அங்கு ஆண்டிற்கு 2 கோடியே 28 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

 • 4. ஆரிப் முகமது கான் எந்த மாநிலத்திற்கு புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார் ?
  • A) கேரளா
  • B) ஆந்திரா
  • C) கர்நாடக
  • D) தெலுங்கானா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமனம் செய்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டார்.

 • 5. எந்த படைக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அழைத்து உள்ளது ?
  • A) கப்பல் படை
  • B) விமானப்படை
  • C) தரை படை
  • D) விண்வெளி ஆராய்ச்சிக்கு மட்டும்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  இந்திய விமானப்படைக்கு ஆகாஷ் ஏவுகணைகள் வாங்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, விமானப் படைக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்கப்படுகிறது. ஆகாஷ் ஏவுகணைகள் ஆகாயத்தில் பறந்து வரும் எதிரி போர் விமானங்களை தாக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவை 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இது ஒளியை விட 2.5 மடங்கு வேகமாக சென்று தாக்கும் வல்லமை பொருந்தியது.

 • 6. இந்தியாவில் இயற்கை எரிவாயு விற்பனை செய்ய எந்த நாடு ஒப்பந்தம் செய்து உள்ளது ?
  • A) சீனா
  • B) அமெரிக்கா
  • C) ஈரான்
  • D) ரசியா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று ரஷியா சென்றுள்ளார். அந்நாட்டின் விளாடிவோஸ்டோக் நகரில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த மோடி இரு நாட்டு உறவு குறித்து விவாதித்தனர். பின்னர், பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதின் முன்னிலையில் இந்தியா-ரஷியா இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்களும் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

 • 7. புகழ்பெற்ற புலம்பெயர்ந்தோர்- இந்தியாவின் பெருமை என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார் ?
  • A) ராம்நாத் கோவிந்த்
  • B) நிர்மலா சீதாராமன்
  • C) வெங்கையா நாயிடு
  • D) நரேந்திர மோடி
  Show Answer Hide Answer
  Answer C

 • 8. ‘சியோல் பாதுகாப்பு உரையாடல் 2019’ என்ற நிகழ்ச்சி எங்கு நடைபெற்றது ?
  • A) தென் கொரியா
  • B) வட கொரியா
  • C) தென் அமெரிக்கா
  • D) வட அமெரிக்கா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  சியோல் பாதுகாப்பு உரையாடல் 2019, ஒன்றாக அமைதியை உருவாக்குதல்: சவால்கள் மற்றும் பார்வை ’. செப்டம்பர் 4 முதல் 6 வரை தென் கொரியாவில் நடைபெற்ற ‘சியோல் பாதுகாப்பு உரையாடல் 2019’ நிகழ்ச்சியில் சிறப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்புரையாற்றினார். கருப்பொருள் : ஒன்றாக அமைதியை உருவாக்குதல்: சவால்களும் பார்வையும் ’

 • 9. மூலதன மானிய திட்டத்தை தொடங்கியவர் யார் ?
  • A) நிதின் கட்கரி
  • B) நிர்மலா சீதாராமன்
  • C) நரேந்திர மோடி
  • D) வெங்கையா நாயிடு
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (எம்.எஸ்.எம்.இ) மூலதனத்தை அணுக அனுமதிக்க மத்திய, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி புதுப்பிக்கப்பட்ட கடன் இணைக்கப்பட்ட மூலதன மானிய திட்டத்தை (சி.எல்.சி.எஸ்.எஸ்) தொடங்கினார்.

 • 10. நாட்டின் ‘சிறந்த ஸ்வச் சின்னமான இடம்’ என்று பெயரிடப்பட்டது கீழ்க்கண்டவற்றுள் எது ?
  • A) வைஷ்ணோ தேவி சன்னதி
  • B) ராமேஸ்வரம் ராமர் சன்னதி
  • C) திருப்பதி ஏழுமலையான் சன்னதி
  • D) ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சன்னதி
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  வைஷ்ணவ தேவி கோவில், இந்தியாவின் இந்து மத புனித கோயில்களில் ஒன்று. இது ஒரு கத்ராவின் திரிகுடா மலைதொடரின் மேல் 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஜம்மு காட்ரா நகரில் இருந்து 46 கிமீ தொலைவில் அமைந்துள்ளது