Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 13-August-2019 to 13-August-2019
 • 1. சந்திராயன் 2 நிலவை நோக்கி தனது பயணத்தை துவங்கும் நாள் ?
  • A) ஆகஸ்ட் 14
  • B) ஆகஸ்ட் 15
  • C) ஆகஸ்ட் 16
  • D) ஆகஸ்ட் 17
  Show Answer Hide Answer
  Answer A

 • 2. யாருடைய பிறந்த நாள் சமூக தினமாக கொண்டாட ரயில்வே முடிவு செய்து உள்ளது ?
  • A) அம்பேத்கார்
  • B) நேரு
  • C) பெரியார்
  • D) காந்தி
  Show Answer Hide Answer
  Answer D

 • 3. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி எங்கு நடைபெற்றது ?
  • A) கனடா
  • B) சீனா
  • C) ஜப்பான்
  • D) ஆஸ்திரேலியா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாசுடன் மோதினர்.ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து ரபெல் நடால் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 6 – 2 என எளிதில் கைப்பற்றினார்.இதையடுத்து, இரண்டாவது சுற்றில் சிட்சிபாஸ் நடாலுக்கு கடும் போட்டியளித்தார். ஆனாலும் நடாலின் அனுபவ ஆட்டத்தால் 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த போட்டி 41 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இறுதியில், 6-2, 7-6 என்ற கணக்கில் வென்று ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இந்த ஆண்டில் நடால் பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும்.

 • 4. இந்திய இணையான அஜித் - விஜய் எந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றனர் ?
  • A) கைப்பந்து
  • B) கால்பந்து
  • C) டென்னிஸ்
  • D) பேட்மிட்டன்
  Show Answer Hide Answer
  Answer D

 • 5. REGN-EB3 மற்றும் mAb114 என பெயரிடப்பட்ட மருந்துகள் எந்த வைரஸ் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ?
  • A) நெபோலா
  • B) H 1 N 1
  • C) எபோலா
  • D) நிபா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  REGN-EB3 மற்றும் mAb114 என பெயரிடப்பட்ட மருந்துகள், 'எபோலா' வைரஸ் வளர்ச்சியைத் தடுத்து, மனித உயிரணுக்களில் அதன் தாக்கத்தை நடுநிலையாக்குகின்றன. இந்த இரண்டு மருந்துகளின் சோதனை முடிவுகள் கணிசமான விகிதங்களைக் காட்டிய பின்னர், 'எபோலா' விரைவில் "தடுக்கக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய" நோயாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனைக்கு நிதியுதவி அளித்த அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் அமைப்பு , ’எபோலாவு’விற்கு எதிரான போராட்டத்தில் இது "மிகவும் நல்ல செய்தி" என அறிவித்துள்ளது. ZMapp மற்றும் Remdesivir எனப்படும் மற்ற இரண்டு சிகிச்சைகள் சோதனைகளில் குறைவான செயல்திறன் கொண்டவை என்று கண்டறியப்பட்டதால் விலக்கப்பட்டுள்ளன.

 • 6. எந்த அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது?
  • A) லக்னோ
  • B) வாரணாசி
  • C) மும்பை
  • D) கல்கத்தா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  எகிப்து நாட்டில் பண்டைய காலங்களில் முன்னோர்கள் இறந்தவுடன் அவர்கள் உடல்களை பதப்படுத்தி வைத்து வந்துள்ளனர். அவைகளை ‘மம்மி’ என்று அழைக்கிறோம். கொல்கத்தா நகரில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திலும் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த ‘மம்மி’யை ஆய்வு செய்ய கடந்த ஆண்டு எகிப்திய பெண் நிபுணர் ரானியா அகமது என்பவர் வந்தார்

 • 7. டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசினியா குரூப்-1ல் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நடைபெற உள்ள நாடு ?
  • A) இலங்கை
  • B) இங்கிலாந்து
  • C) தாய்லாந்து
  • D) பாகிஸ்தான்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசினியா குரூப்-1ல் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் செப்டம்பர் 14, 15-ந்தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடக்கிறது. டேவிஸ் கோப்பை டென்னிஸ்; 55 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானுக்கு செல்வது உறுதி

 • 8. உலக உறுப்பு தான தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
  • A) ஆகஸ்ட் 12
  • B) ஆகஸ்ட் 13
  • C) ஆகஸ்ட் 14
  • D) ஆகஸ்ட் 15
  Show Answer Hide Answer
  Answer B

 • 9. கிரீன்லாந்து சுறாவின் வயது என்ன ?
  • A) 412
  • B) 512
  • C) 612
  • D) 712
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  டக்கு அட்லாண்டிக் சமுத்திர பகுதியில் மீனவர்கள் சமீபத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். குழுவாக சென்ற 28 கிரீன்லாந்து சுறாக்களில் ஒன்று அவர்கள் வலையில் பிடிபட்டது. ஆய்வு செய்ததில் அதன் வயது 512 என தெரிய வந்தது. கிரீன்லாந்து சுறாக்கள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. அளவே வளரும். இவை பல நூறு ஆண்டுகள் வரை வளரும் தன்மை கொண்டவை. நிபுணர்கள் ஆய்வு செய்ததில் இதன் நீளம் 18 அடி என கண்டறியப்பட்டு உள்ளது. இதனடிப்படையிலும், ரேடியோ கார்பன் முறைப்படியும் இதன் வயது 272 முதல் 512 வரை இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சுறா பூமியில் மிக வயது முதிர்ந்த முதுகெலும்பு கொண்ட உயிரினம் ஆகும். இதனால் அமெரிக்க நாடு கண்டுபிடிக்கப்பட்டது, நெப்போலியன் போர்கள் மற்றும் டைட்டானிக் கப்பல் மூழ்கியது உள்ளிட்ட உலகின் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தபொழுது இந்த சுறா கடலில் சுற்றி வந்திருக்க கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் அக்பர் வாழ்ந்த காலத்திற்கும் முந்தைய காலத்தில் இருந்து இந்த கிரீன்லாந்து சுறா வாழ்ந்து வந்துள்ளது.

 • 10. கிரீன் கார்டு பெறுவதற்கு அதிகபட்ச வருமானம் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை எந்த நாடு அறிவித்து உள்ளது ?
  • A) அமெரிக்கா
  • B) ஆஸ்திரேலியா
  • C) கனடா
  • D) ஜப்பான்
  Show Answer Hide Answer
  Answer A