Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள்
 • உலகளவில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் திருப்பூர் 6வது இடத்தைப் பெற்றுள்ளது. உலகளவில் வேகமாக வளரும் நகரங்கள் பற்றி ஆக்ஸ்ஃபோர்ட் பொருளாதார ஆய்வு ஒன்றை நடத்தியது. 2019ஆம் ஆண்டு முதல் 2035ஆம் ஆண்டு வரை திருப்பூரின் சராசரி வளர்ச்சி விகிதம் 8.36 சதவிகிதமாக இருக்கும் என இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. வேகமாக வளரும் முதல் 10 நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் திருச்சி, திருப்பூர், சென்னை ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
 • Reviews


 • இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் சென்ற ஜூன் மாதம் 20ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகரை நியமிக்கும் பணியில் அரசு ஈடுபட்டது. அதற்காக, பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராகக் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் மத்திய அமைச்சரவை நியமனக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • தமிழ் இலக்கிய உலகில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முழுநேர எழுத்தாளராக இயங்கிவரும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவர் எழுதிய ‘சஞ்சாரம்’ நாவலுக்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது. கரிசல் வட்டாரத்தில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை, வலிகள் ஆகியவற்றை மண் மணம் மாறாமல் அந்நாவலில் படைப்பாக்கியுள்ளார்.
 • Reviews


 • இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்துவந்த ஓ.பி.ராவத் நேற்று ஓய்வு பெற்ற நிலையில், 23ஆவது தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இன்று (டிசம்பர் 2) பதவியேற்றுக்கொண்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் கடந்த 1980ம் ஆண்டு ராஜஸ்தானில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.
 • Reviews


 • ஜி20 என்பது வளர்ச்சியடைந்த, வளரும் நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்த கூட்டமைப்பாகும். இந்த ஜி20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு ஜி20 மாநாடு ஜெர்மனியில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டுக்கான மாநாடு அர்ஜென்டினா தலைநகர் பியுனோஸ் அயர்ஸில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. நேற்று மாநாடு நிறைவடைந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான மாநாடு இந்தியாவில் நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
 • Reviews


 • ரஷ்யாவிலிருந்து 3,000 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க மத்திய அரசின் பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செய்யும் கவுன்சில் நேற்று (டிசம்பர் 1) ஒப்புதல் அளித்துள்ளது.
 • Reviews


 • நாடோடிகள், ஈசன் படங்களில் நடித்த நடிகை அபிநயா, தற்போது தேர்தல் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, அம்மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. இதற்கான பிராண்ட் அம்பாசிட்டராக, பேச்சுத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான நடிகை அபிநயா நியமிக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • இந்த ஆண்டில் சர்வதேசத் திறன் தரவரிசைப் பட்டியலில் இரண்டு இடங்கள் பின்தங்கி 53வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஐ.எம்.டி பிசினஸ் ஸ்கூல் நடத்திய 'உலக திறமையான நாடுகள்- 2018' உலகளாவிய ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 63 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், முதலிடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது. முதலீடு, சுலபமான முறையீடுகள் மற்றும் தயார்நிலை ஆகிய மூன்று முக்கியக் கூறுகளைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலகின் 63 நாடுகளில் 6,000 நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், முதல் பத்து இடங்களுக்குள் அமெரிக்காவும், ஆசிய நாடுகளும் இடம்பெறவில்லை.
 • Reviews


 • அதிக ஊதியம் வழங்கப்படும் இந்திய நகரங்களில் பெங்களூரு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 • Reviews


 • கால நிலை மாற்றத்திற்கான உலக இணைய மாநாடு மார்சல் தீவுகளில் நடைபெறுகிறது என்று அந்நாட்டின் அதிபர் ஹில்டா ஹெய்ன் தெரிவித்துள்ளார்.
 • Reviews


 • சர்க்கரை உற்பத்தியில் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்திவரும் நாடான பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
 • Reviews


 • இந்தியாவில் முதலாவதாக செவிலியர் பட்டயப் பயிற்சியில் சேரும் மூன்றாம் பாலினத்தவராக, தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த திருநங்கையான S. தமிழ்ச்செல்வி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார். இந்த முடிவானது மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் D. ஜெயச்சந்திரனின் பரிந்துரையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
 • Reviews


 • சீனாவின் இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், இயற்கை சூரியனை விட அதிக வெப்பமுடைய செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். இச்செயற்கை சூரியனானது 100 மில்லியன் டிகிரி வெப்பம் கொண்டதாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 • Reviews


 • அரசு பத்திரங்கள் சில்லரை முதலீட்டை ஈர்க்கவும், எளிமையாக்கும் வகையிலும் “என்எஸ்இ கோ பிட்” என்ற புதிய மொபைல் செயலியையும், இணைய தளத்தையும் தேசிய பங்குச்சந்தை அறிமுகம் செய்துள்ளது. இதனை, செபி (SEBI) தலைவர் அஜய் தியாகி தொடங்கி வைத்துள்ளார்.
 • Reviews


 • 2017ம் ஆண்டின் இந்திரா காந்தி அமைதிக்கான விருது, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதானது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக 1986-இல் உருவாக்கப்பட்டது. இவ்விருது ஆண்டுதோறும் இந்திரா காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19ம் தேதி அன்று வழங்கப்பட்டு வருகிறது.
 • Reviews


 • பீகார் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக “அமரேஷ்வர் பிரதாப் சாஹி” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் பதவிப் பிரமானம் செய்து வைத்துள்ளார். உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகளை Article – 217-ன் படி குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
 • Reviews


 • உலக கழிவறை தினம் – நவம்பர் 19 (World Toilet Day). உலகளவில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதி உலக கழிவறை தினமாக அனுசரிக்கப்படுகிறது. கழிவறைப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் 19ம் நாள் உலக கழிவறை கழகம் (world Toilet Organisation) ஏற்படுத்தப்பட்டதன் நினைவாக “உலக கழிவறை தினம்” கடைபிடிக்கப்படுகிறது. 2018ம் ஆண்டின் உலக கழிவறை தின கருத்துரு (Theme) “இயற்கை அழைக்கும் போது” (When Nature Calls).
 • Reviews


 • இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களின் சரக்குப் பரிவர்த்தனைகளில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 • Reviews


 • இன்று, அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான உலக அறிவியல் தினம் (World Science Day for Peace and Development). ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ஆம் நாள், அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான உலக அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருத்து: “அறிவியல், ஒரு மனித உரிமை” (Science, a Human Right).
 • Reviews


 • இந்த ஆண்டு முதல் பட்டப்படிப்பை முடிக்கும் அனைத்துப் பெண்களுக்கும் ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிகார் மாநில அரசு தெரிவித்துள்ளது. பெண் குழந்தையின் பிறப்பில் இருந்து பட்டப்படிப்பு முடிக்கும் வரை, மொத்தம் ரூ.54,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே பிகார் மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. இதனுடைய ஒரு அங்கமாக, இந்த திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் மட்டும், பிகாரில் 1 லட்சம் 20 ஆயிரம் பெண்கள் தங்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 • Reviews


 • சீனாவைச் சேர்ந்த முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் முதல் AI செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்துள்ளது.
 • Reviews


 • நவம்பர் 6 முதல் டிசம்பர் 26-ம் தேதி வரை தேசிய சித்தா தின கொண்டாட்டம்

  ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி போன்ற பல பழமையான மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் இந்தியாவில் உள்ளன. ஒவ்வொரு மருத்துவ முறையையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அதற்கான தினத்தை அறிவித்து கொண்டாடி வருகிறது. சித்த மருத்துவத்தை, 18 சித்தர்கள் தோற்றுவித்ததாக வரலாறு கூறுகிறது. சித்த மருத்துவத்தின் முன்னோடியும், 18 சித்தர்களில் முதன்மையானவருமான அகத்திய முனிவர் பிறந்த ஆயில்ய நட்சத்திரம் வரும் நாள், ஆண்டுதோறும் தேசிய சித்தா தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி முதல் தேசிய சித்தா தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு இரண்டாவது தேசிய சித்தா தினம் வரும் நவ. 6-ம் தேதி தொடங்கி டிசம்பர் 26-ம் தேதி வரை 50 நாட்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • Reviews


 • ஐக்கிய நாடுகள் சபை அஞ்சல் அமைப்பானது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டது. சர்வதேச அளவில் பரிமாறப்படும் கடிதங்களில் ஒட்டத்தக்க வகையில் இந்த தபால் தலைகள் உள்ளன. இதன் விலை 1.15 அமெரிக்க டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, சர்வதேச தபால் தலைகளுக்கான சராசரி விலையாகும். மொத்தமாக 10 தபால் தலைகளுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பெரிய படம் ஒன்றும் இந்த அட்டையில் உள்ளது. தீபாவளியைக் கொண்டாடும் வகையில் ஹேப்பி தீவாளி என்ற வாசகங்களும், தீபங்களின் படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
 • Reviews


 • உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி திருநாள் அம்மாநில அரசின் சார்பில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அயோத்தியில் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தீப உற்சவம் நடைபெற்றது. ராம்கதா பூங்காவில் நேற்று (நவம்பர் 6) நடைபெற்ற தீபாவளி விழாவில் சிறப்பு விருந்தினராக தென்கொரிய அதிபர் மனைவி கிம் ஜங் சுக் கலந்துகொண்டார். “உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என்று பெயர் மாற்றம் செய்யப்படும்” என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 • Reviews


 • பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா (பிசிஐ) சார்பில் கடந்த 2012இல் இருந்து ஆண்டுதோறும் பத்திரிகை துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு விருது தொடர்பாக பிசிஐ நேற்று (நவம்பர் 5) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மூத்த பத்திரிகையாளரும் தி இந்து குழுமத்தின் தலைவருமான ராமுக்கு ராஜாராம் மோகன் ராய் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
 • Reviews


 • ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைய தேர்தலுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2019 முதல் 3 ஆண்டுகளுக்கு, மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக பதவி வகிக்கும் இந்தியா. இது குறித்து வாக்கெடுப்பின் போது, 188 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 • Reviews


 • அர்ஜெண்டினாவின் பியோனஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக்கில் அக்டோபர் 10ஆம் தேதி நடந்த போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் செளராப் சவுதரி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
 • Reviews


 • மத்திய அரசில் அட்டார்னி ஜெனரலுக்கு அடுத்ததாக இரண்டாவது முக்கிய பதவியாக சொலிசிட்டர் ஜெனரல் பதவி கருதப்படுகிறது. இப்பதவியில் இருந்த மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இந்தப் பதவி கடந்த 11 மாதங்களாக காலியாவே இருந்து வந்தது. இந்த நிலையில் சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா நேற்று (அக்டோபர் 10) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார்.
 • Reviews


 • இன்று உலக கண் பார்வை தினம் (World Sight Day) உலக அளவில் ஏறத்தாழ 36 மில்லியன் மக்களுக்குக் கண் பார்வை கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலகக் கண் பார்வை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிந்தனை: எங்கும் கண் பராமரிப்பு (Eye Care Everywhere).
 • Reviews


 • சர்வதேச விளம்பரச் சங்கமானது இந்தியா உள்ளிட்ட 76 உலக நாடுகளில் சேவை வழங்குகிறது. ரோமானியாவில் உள்ள புக்கரெஸ்ட்டில் நடந்த சர்வதேச விளம்பர சங்கத்தின் வாரியக் கூட்டத்தில் ஸ்ரீனிவாசன் சுவாமி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து சர்வதேச விளம்பரச் சங்கத்துக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் இவர்தான். இந்தியாவிலிருந்து சர்வதேச விளம்பரச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பேற்பது தனது வாழ்நாள் சாதனையாகும் என்று ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
 • Reviews


 • மகாராஷ்டிர மாநிலத்தில் கொங்கன் பகுதியில் அல்போன்சா ரக மாழ்பழங்கள் அதிகமாக விளைகின்றன. இதனை மாம்பழங்களின் அரசன் என்று கூறுவார்கள். ஹபஸ் என்று கூறப்படும் இந்த மாம்பழம் உலக அளவில் புகழ்பெற்றது. ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பழத்துக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், மகாராஷ்டிராவின் ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய பகுதிகளிலும் விளையும் அல்போன்சா மாம்பழங்களுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication) அங்கீகாரம் கிடைத்துள்ளது.
 • Reviews


 • மூத்த குடிமக்களுக்கு சேவை மற்றும் வசதிகளை வழங்கும் சிறந்த மாவட்ட பஞ்சாயத்துக்கான “வயோஸ் ஸ்ரீத சம்மன் – 2018’ விருது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதாரவியலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சர்வதேச நாணய நிதியம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதாரவியலாளராக இருக்கும் மவுரிஸ் அப்ஸ்ட்ஃபெல்டு இந்த ஆண்டின் இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்குப் பதிலாக கீதா கோபிநாத் அந்தப் பொறுப்பிற்கு நியமிக்கப்படவுள்ளார். உலகின் சிறந்த பொருளாதார அறிஞர்களில் கீதா கோபிநாத்தும் ஒருவர். அவர் கல்வித் துறையில் மிகச் சிறப்பான அனுபவம் கொண்டவர்.
 • Reviews


 • மத்தியப் பிரதேச மாநிலத்தில், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு மாதாந்தர ஓய்வூதியம் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு.
 • Reviews


 • 2018-19ஆம் நிதியாண்டுக்கான ட்ரான்ஸ் யூனியன் சிபில் நிறுவனம் சமீபத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டது. இதில், இந்தியாவைப் பொறுத்தவரை கடன் வாங்குவதில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த மாநிலமாகத் தமிழகம் இருப்பது தெரியவந்துள்ளது.
 • Reviews


 • நாட்டின் நூறாவது விமான நிலையமும், சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையமுமான பாக்யோங் விமான நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம், கடந்த 20 ஆண்டுகளில் உலகப் புகழ் பெற்ற உயிரி சுற்றுலாத் தலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் முதல் மாநிலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
 • Reviews


 • மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் 16 பெட்டிகளைக் கொண்ட பறக்கும் அதிவிரைவு ரயிலை பெரம்பூர் ஐசிஎஃப் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ரயிலானது 2018ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், இதற்கு ’ரயில் 18’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையிலிருந்து மைசூர், கோவை, திருப்பதி போன்ற பெருநகரங்களுக்குச் செல்லும் ‘சதாப்தி’ ரயிலுக்கு பதிலாக இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.
 • Reviews


 • உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் 16ஆவது விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் திகழ்கிறது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா ஹர்ட்ஸ்பீல்டு ஜாக்சன் விமான நிலையம் உள்ளது.
 • Reviews


 • எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் முன்னெடுத்துச் செல்லும் ‘இந்தியா-2047’ திட்டத்தின் ஒரு பகுதியாக 'இம்தாத் இந்தியா' என்ற தேசிய அளவிலான தகவல் மற்றும் சேவைகள் ஒருங்கிணைப்பு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மக்களுக்கான அரசின் நலத் திட்டங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவது, அனைத்து குடிமக்களும் அரசின் பல்வேறு அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை பெறுவதை உறுதி செய்வது, அனைவருக்கும் அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு உதவுவது 'இம்தாத் இந்தியா' நெட்வொர்க்கின் நோக்கம்.
 • Reviews


 • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பதவி வகித்த கோபி அன்னான், சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் நகரத்திலுள்ள மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 18) காலமானார். அவருக்கு வயது 80. இதனை அவரது குடும்பத்தினரும், அன்னான் பவுண்டேஷனை சேர்ந்தவர்களும் தெரிவித்துள்ளனர். வட ஆப்ரிக்க நாடான கானாவைச் சேர்ந்த கோபி அன்னான் 8-4-1938 அன்று பிறந்தார். 1997ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை தொடர்ந்து இரண்டு முறை ஐநா பொதுச் செயலாளராக பதவி வகித்துள்ளார். பதவிக்காலம் முடிந்த பிறகு சிரியாவுக்கான ஐநா தூதராக பணியாற்றினார். சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஓய்வுக்குப் பிறகு சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்துவந்தார். உலகத்திலேயே மிகவும் உயர் பதவியில் அமர்ந்த முதல் வட ஆப்ரிக்க கறுப்பினத்தைச் சேர்ந்தவர் அன்னான். 2001ஆம் ஆண்டு "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக" கோபி அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட்டது.
 • Reviews